மகள் செயலால் மனமுடைந்த ஸ்ரீதேவி.. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லையாம்!

தமிழ் சினிமாவில் கேரியரை தொடங்கி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு பல வெற்றிப் படங்களில் நடித்து நடிகை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என எடுத்துக்காட்டாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி.

ஒரு முறை நண்பரின் திருமண விழாவிற்கு துபாய்க்கு சென்றவர் அங்கேயே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். இந்த செய்தி நாடெங்கும் இருந்த ஸ்ரீதேவி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தற்போது ஸ்ரீதேவியின் இடத்தை அவரது மகள் ஜான்வி கபூர் நிரப்புவாரா என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. ஜான்வி கபூர் தற்போது இந்தி சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜான்வி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் நீண்ட காலமாகவே ஒரு பிரச்சனை இருந்ததாகவும் அதனால் ஸ்ரீதேவி மிகவும் மனமுடைந்து விட்டதாகவும் சமீபத்தில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் சினிமாவில் சாதித்து பெயர், புகழ் பெற்றாலும் ஸ்ரீதேவிக்கு தன்னுடைய மகள் சினிமாவில் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம். சாதாரண தாய்மார்களை போல அவர்களை நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றே விருப்பப்பட்டாராம்.

ஆனால் காலங்கள் செல்லச் செல்ல மூத்த மகள் ஜான்வி கபூருக்கு சினிமாவின் மீது மோகம் அதிகமாகி தன்னுடைய கேரியரை தானே பார்த்துக் கொள்கிறேன் என ஸ்ரீதேவியிடம் சண்டை போட்டுக் கொண்டாராம். பெற்ற மகள் தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என மனம் உடைந்து விட்டாராம் ஸ்ரீதேவி.

அதன் பிறகு அவர்களுடைய கேரியரை அவர்களே முடிவு செய்து கொள்வதில் தவறில்லை என உணர்ந்த ஸ்ரீதேவி வருத்தத்துடன் அவர்களது முடிவை ஏற்றுக் கொண்டார். தன்னுடைய மகள்கள் தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற கவலை ஸ்ரீதேவிக்கு அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும், அதுவே மனதளவில் அவர் பாதிக்க காரணம் எனவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

sridevi-jhanvi-kapoor-cinemapettai
sridevi-jhanvi-kapoor-cinemapettai