கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீ ரெட்டி.. பல பேருடைய ரகசியம் வெளிவருமாம்!

தென்னிந்திய சினிமாவின் சர்ச்சை நடிகை என்றால் அது ஸ்ரீரெட்டி தான். பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரைப் பற்றியும் பல்வேறு உண்மைகளை புட்டு புட்டு வைத்தார்.

சமீபத்தில்கூட சினிமா சம்மந்தப்பட்ட பிரபல அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஏன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் முருகதாஸ் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தினார்.

அது மட்டுமில்லாமல் பல தெலுங்கு நடிகர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றினார். இருந்தாலும் அவருக்கு எதிராக யாருமே கருத்து தெரிவிக்காததால் அவர் கூறிய பல உண்மைகள் பொய்யாகவே மாறிவிட்டது.

இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது முன்னாள் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். சில்க் ஸ்மிதா தற்கொலையில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது என்பது தெரிந்ததே.

silksmitha-cinemapettai
silksmitha-cinemapettai

இதனால் அந்த மர்மத்தை உடைத்து பலபேருடைய வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி வச்சி செய்யப் போகிறாராம் ஸ்ரீ ரெட்டி. இதனால் தற்போது சினிமா வட்டாரங்களில் பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பல முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ஸ்ரீ ரெட்டி இந்த படத்தில் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். இதனால் அந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்