அப்பாவுக்கு இணையாக பிசினஸில் கொடி கட்டி பறக்கும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு.. IPL-லில் ட்ரெண்ட் ஆகிய அழகி!

Kaavya Maaran net worth: ஐபிஎல் போட்டி விரும்பி பார்ப்பவர்களுக்கு அவரவருக்கு என்று ஒரு அணியை பிடிக்கும். அந்த அணி விளையாடும் போது மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவார்கள்.

ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் எந்த அணியின் ரசிகர்களாக இருந்தாலும், ஹைதராபாத் அணி விளையாடும் போது மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவார்கள். அதற்கு அந்த டீமின் விளையாட்டு ஆகா ஓகோ என இருக்கிறது என்றெல்லாம் அர்த்தம் இல்லை.

மொத்த பேரும் டிவி முன்னாடி உட்கார்ந்து பார்ப்பதற்கு காவியா மாறன் மட்டும் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டி நடக்கும் போது சமூக வலைத்தளத்தில் பெரும்பாலும் இரண்டாவது காவியா தான்.

அதற்கு முக்கியமாக காரணம் அவருடைய அழகு என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது. தன்னுடைய அணி ஜெயிக்கும் போது தன்னை மறந்து சிரித்து விடுவார். அதே நேரத்தில் தன்னுடைய அணி தோற்கும் பொழுது கண்கலங்கி உட்கார்ந்து இருப்பார்.

இளைஞர்களும் அதற்கு ஏற்றது மாதிரி மீம்ஸ் மற்றும் வீடியோக்களை வைரல் ஆக்கி விடுவார்கள். இந்த பொண்ணுக்கு என்ன, உலகப் பணக்காரர்கள் லிஸ்டில் இருக்கும் கலாநிதி மாறனின் பொண்ணு இப்படி வைரல் ஆவது சகஜம் தான் என்று தோன்றலாம்.

பிசினஸில் கொடி கட்டி பறக்கும் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு

அழகான பொண்ணு அதனால எல்லாரும் கொண்டாடுறாங்கன்னு ஒரு பேச்சு இருக்குது. சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள்தான் காவியா என்பது எல்லோருக்கும் தெரியும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் வழி பேரன் தான் கலாநிதி மாறன்.

இதனால் பிறக்கும்போதே அரசியல் செல்வாக்கில் பிறந்தவர் தான் காவியா. கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் சோலார் டிவி கம்யூனிட்டி லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். காவியா மாறன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார்.

பின்னர் இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றார். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியை ஏலத்தில் எடுத்ததன் மூலம் இந்திய கிரிக்கெட் உலகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அது மட்டும் இல்லாமல் சன் குழுமத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் காவியா மாறன். ஜன் பாரத் டைம்ஸ் நாளிதழ் காவியா மாறனின் சொத்து மதிப்பை வெளியிட்டு இருக்கிறது.அதன் விவரப்படி காவியாவின் மொத்த சொத்து மதிப்பு 409 கோடி.

சில வருடங்களுக்கு முன்பு கலாநிதி மாறன் 19 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்