மூன்றே நாளில் டாக்டர், மாநாடு வசூலை தூக்கி சாப்பிட்ட ஸ்பைடர் மேன்.. செம்ம கெத்து!

ஹாலிவுட்டில் வெளியாகும் சாகச திரைப்படங்கள் அனைத்தும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வரிசையில் தற்போது ஸ்பைடர்மேன் நோவே ஹோம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் டாப் இடத்தில் உள்ளது. இதுவரை வெளியான மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த படம் அவற்றையெல்லாம் தாண்டி வசூலில் சாதனை புரிந்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான ஹாலிவுட் படமான லயன் கிங் முதல் மூன்று நாட்களில் 54 கோடி வசூலித்தது. இந்த ஸ்பைடர் மேன் படம் அந்த சாதனை எல்லாம் முறியடித்து தற்போது 3 நாட்களில் 100 கோடி வரை வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் அந்த சாதனையை முறியடித்தது.

ஆனால் இந்த இரு படங்களையும் தாண்டி ஸ்பைடர் மேன் படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. குழந்தைகள் மிகவும் விரும்பி பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று இந்த ஸ்பைடர் மேன். மேலும் இதில் பல சாகச காட்சிகளும் இருப்பதால் குழந்தைகளும், மக்களும் ரொம்பவே விரும்பி இப்படத்தை பார்க்கின்றனர்.

இந்த மூன்று நாட்கள் மட்டும் அல்லாமல் இனிவரும் நாட்களிலும் ஸ்பைடர்மேன் வசூலில் சாதனை புரியும் என்பதில் சந்தேகமில்லை அந்த அளவுக்கு படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது இந்தப் படம் வசூலித்த இந்த சாதனை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

spiderman
spiderman

 

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்