யோகி பாபு வீட்ல விசேஷம்.. தீபாவளியன்று அடித்த அதிர்ஷ்டம்

தற்போது டாப் நடிகர்களை காட்டிலும் படு பிஸியான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் யோகி பாபு. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபு தான் நடித்து வருகிறார். இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் காத்து கிடக்கிறார்கள்.

விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்த வருகிறார். சந்தானம், சூரி போன்றோர்கள் ஹீரோக்களாக நடித்து வருவதால் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதிலும் யோகி பாபுவின் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த வருகிறது.

Also Read :சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு

யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தற்போது தமிழ் சினிமா மட்டும் போதாது என பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அதாவது அட்லி இயக்கம் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் யோகி பாபு கடந்த 2020 ஆம் ஆண்டு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாகன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்போது யோகி பாபுவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

Also Read :கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த யோகி பாபு.. விஷயத்தைக் கேட்டு அசந்து போன விஜய் சேதுபதி

தீபாவளி அன்று யோகி பாபுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளாராம். இதை அறிந்த யோகி பாபுவின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சினிமாவிலும் யோகி பாபு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறார்.

திறமைக்கு அழகு முக்கியம் இல்லை என பலருக்கு எடுத்துக்காட்டாக தற்போது யோகி பாபுவின் வாழ்க்கை அமைந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல பட வாய்ப்புகளின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

Also Read :நக்கல் நடிகருடன் பட வாய்ப்பை தட்டி பறித்த யோகி பாபு.. சூரி மார்க்கெட்டை இழக்க இது தான் காரணம்

- Advertisement -