எஸ்பி ஜனநாதன் வாழ்நாளில் இரண்டாம் பாகம் எடுக்க ஆசைப்பட்ட ஒரே படம் இதுதான்.. இது சூப்பர் ஹிட் படமாச்சே!

தமிழ் சினிமாவில் பணம் சம்பாதித்தால் போதும் என படம் எடுப்பவர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் மக்களுக்கு ஏதாவது சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் எஸ்பி ஜனநாதன்.

எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை போன்ற படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் கல்யாண இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் இவர் எழுதிய வசனங்கள் அனைவரையும் யோசிக்க வைத்தது.

இந்நிலையில் எஸ்பி ஜனநாதன் கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார். இதில் பொதுமக்களிடம் முதலாளிகள் செய்யும் கொடுமையை தோலுரித்துக் காட்டியுள்ளாராம். ஆனால் படம் வெளியாவதற்கு முன்னரே சமீபத்தில் இயற்கை எய்தினார் எஸ்பி ஜனநாதன்.

இருந்தாலும் லாபம் படத்தின் 90 சதவிகித வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு தான் சென்றுள்ளார். இதனால் விஜய் சேதுபதி விரைவில் லாபம் படத்தின் மொத்த வேலைகளையும் விரைவில் முடித்து வெளியிட வேண்டுமென படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க எஸ்பி ஜனநாதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு படத்தை மட்டும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். அந்த படம் தான் அவர் முதன் முதலில் இயக்கிய இயற்கை திரைப்படம். இயற்கை திரைப்படத்திற்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு.

iyarkai-cinemapettai
iyarkai-cinemapettai

ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் வித்யாசாகர் இசையில் வெளியான இயற்கை படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்தப் படத்தின் கதை தன்னை மிகவும் பாதித்ததால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தாராம். ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -