சௌந்தர்யா கடைசி நாட்களில் பேசிய உருக்கமான சம்பவம்.. சொன்னது அப்படியே நடந்திருச்சு!

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர் சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமாவிற்கு பொன்னுமணி என்ற திரைப்படத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். தமிழில் முன்னணி கதாநாயகர் பலருடன் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாருடன் அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் அவர்களின் மகள் தான் சௌந்தர்யா. இவர் 2003 ஆம் ஆண்டு ஜி.எஸ்.ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னுமணி திரைப்படத்தில் அறிமுகமாகி தன்னுடைய சிறந்த நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்கள் தான் சௌந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சௌந்தர்யாவுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார்.

சௌந்தர்யா எந்த படம் வாய்ப்பு வந்தாலும் உடனே இயக்குனர் ஆர் வி உதயகுமார் கேட்டு முடிவு எடுப்பாராம். இறுதியாக அவர் பேசிய போன் காலம் இயக்குனருடன் என்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதாகும். 2004ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பு உதயகுமாரின் மனைவியிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் பிரசாரத்தை முடித்துவிட்டு நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

மனம் உருகிய இயக்குனர் கடைசியாக அவர் விமானத்தில் புறப்பட்டுப் போகும் நாளுக்கு முந்தைய நாள் உதயகுமாரின் வீட்டில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது விரைவில் சினிமாவை விட்டு விலகி விடுவேன் எனவும், இப்போது நடிப்பதுதான் கடைசி படம் எனவும் கூறினாராம்.

மேலும் சினிமாவை விட்டு விலகி குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என ஆசையாக இருப்பதாகவும் கூறியதாக உதயகுமார் ஒருமுறை மேடையில் கூறி கண்ணீர் வடித்தார். அதனைத் தொடர்ந்து சௌந்தர்யா அன்று சொன்னது அப்படியே நடந்துவிட்டது, அவர் நடித்துக் கொண்டிருந்த படம்தான் அவரது கடைசி படமாகிவிட்டது எனவும், அவர் தன்னுடைய குழந்தையை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார்.

soundarya
soundarya

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -