விசுவாசத்தில் நாயை மிஞ்சிய சொக்கன்.. சசிகுமார், சூரி கூட்டணியில் வெளியான கருடன் கிளிம்ஸ் வீடியோ

Garudan Glimpse Video : வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக சூரி அவதாரம் எடுத்தார். இந்த படம் அவரை வேறு தரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்நிலையில் தொடர்ந்து சூரிக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திலும் சூரி நடித்து வருகிறார்.

இந்த சூழலில் வெற்றிமாறனின் மற்றொரு கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கருடன் படத்தில் சூரி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான கிளிம்ஸ் வீடியோ இப்போது வெளியாகி இருக்கிறது. சசிகுமார், உன்னிமுகுந்தன் மற்றும் சூரி கூட்டணியில் இந்த படம் உருவாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவே தெறிக்கவிடும் அளவிற்கு வசனம் இடம் பெற்று உள்ளது. அதாவது விசுவாசத்தில் நாய்க்கும் மனுஷனுக்கும் போட்டி வச்சா எப்போதுமே நாய் தான் ஜெயிக்கும். விசுவாசத்தின் நாய்க்கும் என்னுடைய சொக்கனுக்கும் போட்டி வச்சா சொக்கன் தான் ஜெயிப்பான் என்ற வசனம் இடம்பெறுகிறது.

Also Read : மும்மூர்த்திகளுடன் கூட்டணி போடும் சூரி.. குமரேசன் காட்டில் கொட்டும் பேய் மழை

இதில் சொக்கனாக சூரி விசுவாசத்தில் தாயை மிஞ்சும் அளவிற்கு நன்றியுடன் இருக்கிறார். மேலும் இந்த படம் கண்டிப்பாக விடுதலையை மிஞ்சும் அளவுக்கு சூரிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும் என்பது கிளிம்ஸ் வீடியோ மூலம் தெரிகிறது. கருடன் படத்தின் மூலம் சூரி அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார்.