ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொன்ன சந்தானத்துக்கு பதிலடி.. நான் நானாகத்தான் இருப்பேன் என்று சொன்ன சூரி

சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து எந்த ஒரு படமாக இருந்தாலும் அதற்கு நடிகர் எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு இணையாக காமெடியன்களும் இருந்தால் மட்டும் தான் அந்தப் படம் முழுமையாக வெற்றி பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் எத்தனையோ படங்களில் காமெடியனாக நடித்தவர்கள் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்கள். ஏன் நாகேஷ், கவுண்டமணி, விவேக் இவர்கள் எல்லாம் கூட பல படங்களில் ஹீரோவாக நடித்து அதிலும் பெயர் எடுத்து இருக்கிறார்கள்.

இந்த வரிசையில் தான் சந்தானம் காமெடியாக நடித்து வந்திருந்தாலும் திடீரென்று அவருக்கு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்ததால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சர்வ சுந்தரம் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த நேரத்தில் இவர் சொன்னது இனிமேல் நான் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று சொன்னார்.

Also read: விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

அதன் பிறகும் இவருடைய கவனம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது மட்டும்தான் இருந்ததே தவிர இவருக்கு எத்தனையோ படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு வந்தும் அதை தட்டி கழித்து விட்டார். ஆனால் இவரை போல தான் காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த சூரி, திடீரென்று இவருக்கு ஒரு வாய்ப்பு வந்ததால் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அதேபோல இப்படம் மிகச்சிறந்த வரவேற்பை இவருக்கு கொடுத்தது.

அத்துடன் சூரி ஹீரோ மெட்டீரியலுக்கு உகந்தவர் என்று இவருடைய ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் சூரி இதற்கு விளக்கமாக ஒரு பதிலை கொடுத்து தெளிவுபடுத்தி விட்டார். கதைக்கு ஏற்ற மாதிரி நான் கதையின் நாயகனாக நடிப்பேன் அதே நேரத்தில் என்னுடைய கேரக்டருக்கு ஏத்த மாதிரி காமெடியனாகவும் நான் நடிக்க தயார் என்று கூறிவிட்டார்.

Also read: மொக்கை காமெடியால் டெபாசிட் இழந்த 5 பட தயாரிப்பாளர்கள்.. அடி மேல அடி வாங்கும் சந்தானம்

அதாவது கதாநாயகன் வேறு கதையின் நாயகன் வேறு என்று தெளிவாகப் புரிந்து இருக்கிறார் சூரி. அதனால் சூரியின் முடிவு தீர்க்கமாக இருந்ததால் இவரால் இரண்டு பக்கமும் நடுநிலையாக இருந்து சினிமாவில் சாதிக்க முடியும். அத்துடன் எப்பொழுதும் நான் நானாகவே தான் இருப்பேன் என்று சொல்லி காமெடியனாக நடிப்பதற்கும் தயார் என்று தெரியப்படுத்தி விட்டார்.

இது கண்டிப்பாக சந்தானத்துக்கு உறுத்தும் வகையில் சூரி சொன்ன பதில் இருந்திருக்கும். ஏனென்றால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று சுற்றித்திரிந்த இவருக்கு அதில் வெற்றியை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார். இனிமேல் காமெடியனாகவும் எப்படி போவது என்றும் அது சாத்தியமாகுமா என்று ரெண்டு கெட்ட நிலைமையில் சந்தானம் இருக்கிறார். இனிமேலாவது இவருக்கு வரும் காமெடி சான்ஸ் வாய்ப்பை மிஸ் பண்ணாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இவருடைய ஹியூமர் சென்சுக்கு அடிச்சிக்க ஆளே கிடையாது.

Also read: பாம்பைப் போல் கழுத்தை சுற்றிய கடன்.. தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கு பிடி போடும் சந்தானம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை