ஹீரோவான சூரியின் அடுத்தடுத்த 4 ப்ராஜெக்ட்.. விடுதலை படத்தால் அடித்த ஜாக்பாட்

சுமார் 25 படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்துக் கலக்கிய சூரி, இப்போது ஹீரோவாக  ப்ரோமோஷன் அடைந்து விட்டார்.  தற்சமயம் சூரியின் கைவசம் 4 ப்ராஜெக்ட் உள்ளது. அதிலும் இவர் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்த விடுதலை திரைப்படம் இவருக்கு அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம்.

விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில் வரும் மார்ச் 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் விடுதலை படத்தில் சூரி முதன்முதலாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் குமரேசன் என்ற கேரக்டரில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி  படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது. அதனாலேயே தற்போது அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பி உள்ளது. அதுமட்டுமல்ல விடுதலை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சூரிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.

Also Read: இதுவரை பட்ட அவமானங்களை சவாலாக மாற்றிய சூரி.. மனைவியவே வியக்க வைத்த செயல்

கொட்டுக்காளி: சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக அடுத்து நடிக்கும் படம் கொட்டுக்காளி. இந்த படத்தில் இவருடன் அனன்யா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  கூழாங்கள் பட புகழ் பி.எஸ். வினோத் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல்  பார்வை வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இயக்குனர் ராம்- சூரி கூட்டணி: இயக்குனர் ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் அஞ்சலி  நடிக்க இருக்கும் புதிய படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், படத்தினை தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

இயக்குனர் அமீர்- சூரி கூட்டணி: அமீர் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்க உள்ளார். சில வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த அமீர் நீண்ட இடைவெளிக்கு பிறகு, தற்போது கதாநாயகனாக சூரியை வைத்து இயக்கும் முடிவில் இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பல வருடங்களாக காமெடி நடிகராக ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சூரி, இனி மாஸ் ஹீரோவாக கலக்க போகிறார். மேலும் விடுதலை படத்தின் மூலம் சூரிக்கு அடித்த ஜாக்பாட் போல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஹீரோவான சூரி நடிப்பில் அடுத்தடுத்து இந்த 4 படங்கள் தான் ரிலீஸ் ஆகப்போகிறது.

Also Read: வடசென்னையை தொடர்ந்து விடுதலை படத்திற்கும் செக் வைத்த சென்சார் போர்டு.. முகம் சுளிக்க செய்த வெற்றிமாறன்

- Advertisement -