ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சண்டைக் காட்சிகளில் ஹீரோக்களை மிஞ்சிய சூரி.. VFX இல்லாமல் ஒரிஜினலாக நடித்ததன் விளைவு

காமெடி நடிகராக நடிப்பதன் மூலம் கடைசி வரை காமெடியன் ஆகவே சினிமாவில் இருந்து விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய பரிணாமத்தை மாற்ற வேண்டும் என நினைத்து நகைச்சுவை நடிகர் சூரி, தற்போது ஹீரோவாக விடுதலை படத்தில் மிரட்டி விட்டுள்ளார்.

தேசிய திரைப்பட விருதுகளை வாங்கி குவித்துக் கொண்டிருக்கும் கோலிவுட்டின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி போலீஸ் கான்ஸ்டபில் கேரக்டரில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

Also Read: ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா

இதில் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரெய்லர்  வெளியாகி பலருக்கும் சிலிர்ப்பூட்டியது. அந்த அளவிற்கு இதில் சூரி இடம்பெறும் காட்சி தரமாக இருந்தது. அதிலும் சண்டைக் காட்சிகளில் மாஸ் ஹீரோக்களை எல்லாம் மிஞ்சி சூரி நடித்துள்ளார்.

மேலும் இதில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகளில் எந்த VFX-சும் இல்லாமல் 100% ஒரிஜினலாக சூரி நடித்திருக்கிறார். இதன் விளைவாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. விடுதலை படத்தின் கிளைமாக்ஸில் ஓட்டு வீட்டு மேல் டைவ் அடித்து விழும் சூரியின் முகம் மற்றும் கையில் பயங்கரமாக அடிபட்டு இருக்கிறது.

Also Read: மேடையில் வைத்து வெற்றிமாறனை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி.. வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட விரத்தி

இந்த காட்சியில் நடித்த பிறகு சூரியின் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரால் ஒரு மாதம் கையை சுத்தமாகவே அசைக்க முடியவில்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். படத்தில் கதாநாயகனாக நடித்தால் இதெல்லாம் நடப்பது சகஜம் தான் என சிலர் கூறினாலும், சூரியின் வெறித்தனமான முயற்சியை அவருடைய ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

மேலும் நகைச்சுவை நடிகராக இருந்தபோதும் சரி, இப்போது கதாநாயகனாக மாறிய பிறகும் சரி, நடிப்பிற்காக எந்த லெவலுக்கு வேணாலும் இறங்கி தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் சூரிக்கு விடுதலை படத்திற்கு பிறகு விடிவு காலம் பிறந்து விட்டது.

Also Read: விடுதலை ரிலீஸுக்கு முன்பே வெளிவந்த சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்.. காமெடிக்கு இனி வாய்ப்பே இல்லையாம்!

ஏனென்றால் இந்த படத்திற்கு பிறகு அவர் கதாநாயகனாக நடிப்பதற்காகவே நிறைய பட வாய்ப்புகள் குவிகிறது. அதிலும் இப்போது பிஎஸ் வினோத் ராஜ் இயக்கும் கொட்டுக்காளி படத்தில் சூரி கதாநாயகனாக, மலையாள நடிகை அன்னா பென் உடன் இணைந்து நடிக்கிறார். இதற்கான டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News