ஜியோவால் சூரிக்கு வந்த தலைவலி! கருடனுக்கு முட்டுக்கட்டை போடும் கார்ப்பரேட்

Soori starrer Garudan movie release date may be  postponed: வெண்ணிலா கபடி குழுவின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சூரி குணச்சித்திர நடிகர் ஆகவும் காமெடி நடிகராகவும் கலக்கி வந்த சூரி, வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தார். தனக்குரிய காமெடி பாணியிலிருந்து முற்றிலுமாக மாறி சீரியஸான கதாபாத்திரத்தை உள்வாங்கி அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார் சூரி. 

வெற்றி மாறனின் ராசி அவரை வேற லெவல்க்கு கொண்டு போனது எனலாம். தொடர்ந்து நாயகனாகவே பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் சூரி. அவர் நடிக்கும் திரைப்படங்கள் விடுதலை 1 மற்றும் 2 போன்றவை சர்வதேச அளவுக்கு தரம் உயர்வதுடன் சூரியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. 

இப்படியான சூரியின் மகுடத்தில் மற்றும் ஒரு வைரக்கல்லாக அமைந்துள்ள திரைப்படமே கருடன். வெற்றி மாறனின் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்,சமுத்திரக்கனி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் சூரி அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

Also read: வெற்றிமாறன், சுதா கொங்காராவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த சூர்யா.. வருஷகணக்கா சொல்லும் காரணம்

வெற்றிமாறன் கதை என்பதுமே ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்க, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வசனங்கள் ரசிகர்களை வேற லெவல்ல மிரட்டியது. சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனின் மிரட்டும் தோற்றத்தில் விசுவாசத்திற்கு பெயர் போன சொக்கனாக புதிய கோணத்தில் பரிணமிக்கிறார் சூரி. 

லார்க் ஸ்டூடியோஸ் குமார் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் 40 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது கருடன். இந்த மாத இறுதியில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தீவிர படுத்திய போது டிஜிட்டல் வியாபாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். 

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் இதன் உரிமையை வாங்க முன்வந்த பொழுது திடீரென ஜியோ உடன் ஏற்படப்போகும் இணைவால் படத்தின் வியாபாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பிஸ்னஸ் தாமதமாவதால் ஏப்ரல் அல்லது கோடை விடுமுறையை ஒட்டி இப்படத்தின் ரிலீஸ் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சசிகுமாரை மிஞ்சிய சூரி.. கருடனுக்காக வாங்கிய 4 மடங்கு சம்பளம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை