ஹீரோ ஆகலாம்னு பார்த்தா ஜீரோ ஆக்கிடுவானுங்க போல.. ஆழம் தெரியாமல் காலை விட்ட சூரி

தனது தனித்துவமான காமெடி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் சூரி. காதல் என்ற படத்தில் ரூம் மேட் ஆக நடித்து யதார்த்தமான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அதற்குப்பின் வந்த வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் புரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு படத்திலும் தனக்கென்று கதாபாத்திரத்தை ஆழமாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். போராளி, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு, ஜில்லா, ரஜினிமுருகன் ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது.

இப்படி தனது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி திடீரென்று ஹீரோவாக அவதரித்தார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

இதை தவிர அமீர் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக சூரி நடிக்க உள்ளாராம். இப்படி அடுத்தடுத்து ஹீரோவாக படங்களை தேர்வு செய்யும் சூரிக்கு திடீரென்று ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இதுபோன்ற இரண்டு படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக கிட்டதட்ட 9 படங்களில் காமெடி கதாபாத்திரத்தை தவற விட்டுள்ளார்.

இதனால் இனி ஹீரோ கதாபாத்திரம் தள்ளிப் போட்டுவிட்டு காமெடி கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகிறாராம் சூரி. இவரின் காமெடி கதாபாத்திரத்தில் தான் எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

சில இயக்குனர்கள் சூரியை வைத்து படம் எடுக்கலாம் என்று கூறினால் அவர்தான் ஹீரோவாக மாறி விட்டார் இந்த கருத்துக்களையும் கூறி வருகிறார்களாம். இதனால் வருமானமும் பாதி அவுட். இப்படியே போனால் நம்மளை சோலி முடித்துவிடுவார்கள் என்பதால் மீண்டும் காமெடி ட்ராக்கை பிடித்து உள்ளாராம் சூரி.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை