விடுதலைக்கு உழைத்தது வீணா போகல.. டாப் ஹீரோக்களுக்கு இணையாக சூரி கமிட்டான 5 பெரிய படங்கள்

Soori: சூரி நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நிலையில் வெற்றிமாறன் அவரை ஹீரோவாக மாற்ற ஆசைபட்டார். அப்படி உருவான படம் தான் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தார்கள். அதிலும் குறிப்பாக சூரியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.

இதுவரை காமெடி நடிகராகவே பார்த்த சூரியை முற்றிலும் வேறு விதமாக வெற்றிமாறன் காட்டி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சூரியின் விடுதலை படத்திற்காக கடின உழைப்பை போட்டிருந்தார். இந்த படம் பல வருடங்களாக இழுத்தடித்ததால் வேறு படத்தில் நடிக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. ஆனால் அதற்கு இப்போது கை மேல் பலனாக சூரிக்கு அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் படங்களில் வாய்ப்பு வந்திருக்கிறது.

Also Read : பிரகாசமான நடிகரின் கேரியருக்கு 99% ஆப்பு வச்சாச்சு.. சூழ்ச்சியால் வெற்றிமாறன் கூட ட்ராப் செய்த பரிதாபம்

அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் உருவாகி வருகிறது. இதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் ஒரு படத்தில் சூரி இணைய இருக்கிறார்.

சூரி மக்கள் மத்தியில் பிரபலமடைய காரணமாக இருந்த காமெடி பரோட்டா காட்சி தான். இப்போது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூரி இணையும் படத்திற்கு பரோட்டா என்ற பெயர் வைக்க இருகின்றனர். அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read : சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வெற்றிமாறன்.. சூரியை வைத்து மீண்டும் கல்லா கட்ட போட்ட திட்டம்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களை இயக்கி வரும் லிங்குசாமிக்கு கை கொடுக்கும் அளவுக்கு படம் ஹிட் ஆகவில்லை. இந்த சூழலில் சூரிக்கு பக்கவான ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். அந்தப் படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி நடிக்க இருக்கிறார். இவ்வாறு பெரிய நடிகர்கள் படங்களில் டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக சூரி நடிப்பது பெருமைக்குரிய விஷயம் தான். விடுதலை படத்தின் வெற்றி சூரியின் தலையெழுத்தை மொத்தமாக மாற்றிவிட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Also Read : வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் சூரி

- Advertisement -