ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அடுத்தடுத்து சூரிக்கு வரும் கதாநாயகன் வாய்ப்புகள்.. விடுதலைப் படத்தைத் தொடர்ந்து இனி முழு நேர ஹீரோ

சூரி காமெடி நடிகராக எல்லாரும் மனதில் ஆழமாக பதிந்த ஒரு காமெடியன். ஆனால் இப்பொழுது ஒரு சில காமெடி நடிகர்கள் ஹீரோவாக வர வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து நடித்த வருகிறார்கள். அந்த வரிசையில் ஏற்கனவே சந்தானம், காமெடியில் நடித்து பிரபலமான பிறகு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்ததில் இருந்து அவருடைய முழு கவனமும் ஹீரோவுக்கு மாறிவிட்டது.

இவரைத் தொடர்ந்து சூரிக்கும் தற்போது ஹீரோவாக நடிப்பதற்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் அவர் கடந்த மூன்று வருடங்களாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த விடுதலை படம் இந்த மாதம் கடைசியில் வெளியாக உள்ளது. இது குறித்து அவர் தற்போது இசை வெளியீட்டு விழாவில் பேசியது முழுவதுமாக ஒரு ஹீரோவிற்கு இருக்கும் தோரனுடைய அவர் பேச்சு இருந்தது.

Also read: விடுதலை ரிலீஸுக்கு முன்பே வெளிவந்த சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்.. காமெடிக்கு இனி வாய்ப்பே இல்லையாம்!

மேலும் விடுதலை படத்தை தொடர்ந்து அவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு வரிசையாக தேடி வருகிறது. இப்பொழுது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்கு இடையில் விடுதலை படத்தின் தயாரிப்பாளர், ஒரு இயக்குனர் கூட. அதனால் விடுதலை படத்தில் சூரி  நடிப்பை பார்த்து அவருக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

பின்பு மீண்டும் அடுத்த படத்தில் இவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குபவர் விடுதலை படத்தின் தயாரிப்பாளர் தான். அத்துடன் இன்னும் இவருக்கு பட வாய்ப்புகள் வர இருப்பதால் இனிமேல் இவர் காமெடியில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கம்மியாகிவிட்டது. இதற்கடுத்து சூரி இன் நடிப்பு ஹீரோவாகத்தான் அமையப்போகிறது.

Also read: தன் இனத்தை காப்பாற்ற போராடும் விஜய் சேதுபதி வாத்தியார்.. வெற்றிமாறனின் விடுதலை பார்ட் ஒன் ட்ரெய்லர்

இதற்கு அடுத்து இயக்குனர் ராம் பாலாஜி சக்திவேல் பொதுவாகவே எதார்த்தமாக படத்தை எடுக்கக் கூடியவர்கள். அவர்களும் இப்பொழுது அடுத்த படத்திற்காக சூரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் சூரி எதார்த்தமான கதாநாயகனாக கண்டிப்பாக மாறிவிடுவார் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

ஆனால் ஒரு பக்கம் இது சந்தோஷமாகவே இருந்தாலும் காமெடிக்கு வந்தவர்கள் எல்லாரும் ஹீரோவாகிவிட்டால் இனி படத்தில் காமெடியை யாருதான் பண்ணப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக வருகிறது. ஆனாலும் அந்தப் பிரச்சினை எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்காகவே இப்பொழுது படங்களில் ஹீரோவாக நடிப்பவர்களே காமெடியும் செய்து வருகிறார்கள்.

Also read: காசேதான் கடவுளடா படத்திற்கு காசால் வந்த சோதனை.. கோர்ட் ஆர்டரை மீறினாரா யோகி பாபு.?

- Advertisement -

Trending News