ஆறு நாட்களில் கொண்டாடப்பட்ட 5 பாடல்கள்.. கோட் பாடலை பின்னுக்கு தள்ளிய விஷாலின் அந்த பாடல்

Actor vishal : படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷனாக அமைவது பாடல் தான். அதனால் தான் டீசர், ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள்.

அவ்வாறு ஏப்ரல் 15 முதல் 21 வரை ஆறு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக அமைந்துள்ளது. அதுவும் கோட் பாடலை பின்னுக்கு தள்ளி விஷாலின் ரத்னம் பட பாடல் அதிகம் கவர்ந்திருக்கிறது.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் படம் ஏப்ரல் 26 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் இடையே ஆன காதல் பாடலாக உருவாகி இருக்கும் உயிரே என்ற பாடல் வெளியாகி உள்ளது.

விசில் போடு பாடலுக்கு டஃப் கொடுத்த விஷால்

அடுத்ததாக வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மதன் கார்கி வரிகளில் உருவான விசில் போடு என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த பாடலுக்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ படம் பெரிய அளவில் வசூல் பெறவில்லை.

ஆனாலும் இந்த படத்தில் இடம்பெற்ற செல்லக்கிளி என்ற பாடல் ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளது. இப்படத்திற்கு பரத் தனசேகரன் இசையமைத்திருக்கிறார். அடுத்ததாக இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கிறது ஸ்டார் படம்.

இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்கி வரிகளில் உருவான விண்டேஜ் காதல் பாடல் இளைஞர்களின் ஃபேவரைட் பாடலாக அமைந்துள்ளது. அதேபோல் யுவன் இசையில் பொன் ஒன்று கண்டேன் படத்தில் இடம்பெற்ற உன் அழகை ரசித்தேன் பாடலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்