பிக்பாஸ் பற்றி யாரும் அறிந்திராத சில ரகசியங்கள்.. போட்டியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை

தமிழில் உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் பிற மொழிகளிலும் ஹிந்தியில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும், அதேபோல் தெலுங்கு மொழியில் முன்னணி நட்சத்திரமான நடிகர் நாகார்ஜுனாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட நபர்கள், 100 நாட்களுக்கு பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படுகின்ற டாஸ்குகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இந்த நிபந்தனை நாம் அனைவரும் அறிந்ததே. இதுவரை நாம் அனைவரும் அறியாத சில விஷயங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இந்த தகவல்களால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இருக்கக்கூடிய பின்புலம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

அதாவது இந்நிகழ்ச்சிக்கு போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட நபருக்கு, அவர்களின் 100 நாட்களுக்கான கால்ஷீட்டை ஒதுக்கி வைப்பதற்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி சார்பில் சம்பளமாகவோ அல்லது மொத்த தொகையாகவோ அந்தந்த போட்டியாளர்களுக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படுகிறதாம். இதன் மூலம் போட்டியாளர்கள் தங்களின் இயல்பான வருமானத்தை பெற்றுக் கொண்ட பிறகே பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

இதனை தொடர்ந்து, அடிக்கடி பிக்பாஸ் வீட்டிற்குள் சுத்தம் செய்வதற்காக காட்டினாலும், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் படி காட்டினாலும், அது முழுவதும் நிஜம் அல்ல. ஏனெனில் பிக் பாஸ் வீட்டை சுத்தம் செய்வதற்காக மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம். இவர்களிடம் போட்டியாளர்கள் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளுதல் கூடாது என்பது முக்கியமான நிபந்தனையாம்.

bb5-home
bb5-home

அத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நிகழக்கூடிய சில நிகழ்வுகள் மட்டும் முன்னதாகவே திட்டமிட்டப்பட்டவை. இவை அனைத்தை காட்டிலும் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற அவராக முன்வந்தாலோ அல்லது சூழ்நிலை காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டலோ, அந்த போட்டியாளர் பிக் பாஸின் உரிமையாளர் விதிக்கக் கூடிய அபராத தொகையை செலுத்திவிட்ட பிறகுதான் வெளியேற வேண்டுமாம்.

மேல் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் சம்மதம் தெரிவித்து, பல தந்திரங்களும், சூட்சமங்களும் நிறைந்த இந்த பாண்டு பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வானதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் வீட்டின் அனைத்து புறங்களில் மட்டுமல்லாமல் கண்ணாடிலையும் கேமராவை வைத்து படம் பிடித்து வருகின்றனர். ஏனெனில் கண்ணாடிக்குப் பின் புறமாக கேமராவை பொருத்தும் பொழுது, காட்சிகள் அனைத்தும் தெளிவாக கிடைக்கிறதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்