வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மொக்க கதையை செலக்ட் செய்து மண்டையை சொரியும் 5 நடிகர்கள்.. பரிதாபத்திற்குரிய அகில உலக சூப்பர் ஸ்டார்

Tamil Actors: தமிழ் சினிமாவில் 2000களின் தொடக்கத்தில் பயங்கர பாப்புலராக இருந்த ஹீரோக்கள், தற்போது எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதைப் போல் மாறி இருக்கிறார்கள். தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல இருந்த டிமாண்ட் எல்லாம் தொலைத்து விட்டனர். கவனமாக கதை கேட்டு, தேர்ந்தெடுத்து திரைப்படங்கள் நடிக்காமல் போனதாலேயே இந்த பரிதாப நிலைமை. யார் அந்த 5 ஹீரோக்கள் என்று பார்க்கலாம்.

பரத்: 2003இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவரே பரத். பிறகு செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். காதல் படத்தின் சக்ஸஸ் பிறகு காதல் பரத் என்று பெயர் மாறும் அளவுக்கு பேமஸ் ஆனார். எம்டன் மகன், காளிதாஸ், கண்டேன் காதலை போன்ற படங்கள் வெற்றியாக அமைந்தது. இதைத் தவிர்த்து கூடல் நகர், பழனி, முனியாண்டி, சேவல், தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தது.

Also Read:சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

ஷாம்: 12b திரைப்படத்தின் மூலம் 2001இல் அறிமுகமானவர் ஷாம். லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற திரைப்படங்கள் அனைத்தும் பயங்கர பேமஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் வெளியான தூண்டில், இன்பா, ஆண்டனி யார், ஏபிசிடி, அகம் புறம், கிரிவலம் போன்ற எக்கச்சக்க படங்கள் தோல்வியிலேயே முடிந்தது.

ஜெய்: தளபதி விஜய் உடன் பகவதி படத்தில் நடித்து, கதாநாயகனாக சென்னை 600028 திரைப்படத்தில் அறிமுகமானார் ஜெய். சுப்பிரமணியபுரம், பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற திரைப்படங்களும் சக்சஸ் ஆனது. ஆனால் இதை தவிர்த்து எதுக்கு நடிக்கணும்னு தெரியாத அளவுக்கு சரோஜா, வாமணன், அவள் பெயர் தமிழரசி, புகழ், பலூன், கனிமொழி, நீயா 2, காபி வித் காதல் வரை மோசமாக அடி வாங்கியாது.

Also Read:Iraivan Movie Review- சைக்கோ கில்லரை தண்டிக்க இறைவன் அவதாரம் எடுத்தாரா.? ‘A’ சர்டிபிகேட் வாங்கிய ஜெயம் ரவி பட திரை விமர்சனம்

நகுல்: பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நகுல். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற திரைப்படங்கள் மூலம் பயங்கர பீக்கில் இருந்தார். ஆனால் கந்த கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், நாரதன், பிரம்மா டாட் காம், செய் போன்ற திரைப்படங்கள் மூலம் மார்க்கெட் கிளோஸ் ஆகியது .

மிர்ச்சி சிவா: அகில உலக சூப்பர் ஸ்டார் என அழைக்கக்கூடிய மிர்ச்சி சிவாவும் இதில் ஒருவர். சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, சரோஜா, தமிழ் படம் ,கலகலப்பு போன்ற திரைப்படங்கள் மூலம் பயங்கரமாக பேமஸானார். இன்னொரு பக்கம் தமிழ் படம் 2, சொன்னா புரியாது, அது வேற இது வேற, தில்லுமுல்லு, போன்றவை அவருடைய கேரியரையே க்ளோஸ் செய்தது.

Also Read:லக்க லக்க லக்கா, நிஜ சந்திரமுகியின் ஆட்டம் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

- Advertisement -

Trending News