உஷாரய்யா உஷாரு.. பணத்தாசை காட்டி வலை விரிக்கும் மாடல் அழகி

இப்போதெல்லாம் பண மோசடி செய்வதையே முழு நேர வேலையாக பல பேர் வைத்திருக்கின்றனர். அப்படித்தான் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் அக்கடதேச மாடல் அழகி ஒருவர் மீது இப்போது பண மோசடி புகார் விழுந்துள்ளது.

அம்மணிக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ஃபாலோவர்கள் இருக்கின்றனர். அதிலும் இளைஞர்கள் பட்டாளம் தான் இவருக்கு தீவிர விசிறியாக இருக்கின்றனர். அதை நன்றாக தெரிந்து கொண்ட இவர் தற்போது பண மோசடி செய்து சிக்கி இருக்கிறார்.

அதாவது நீங்கள் கொடுக்கும் பணத்தை 10 மடங்காக திருப்பித் தருகிறேன் என்று அவர் வலை விரித்து இருக்கிறார். அதை நம்பி பல இளைஞர்கள் காசை கொடுத்து ஏமாந்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: புளியங்கொம்பை பார்த்தவுடன் சின்ன ஹீரோவை கழட்டிவிட்ட பிரபலம்.. சாபத்தால் பிரிந்த குடும்பம்

இதை சிலர் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய நிலையில் அவருடைய வண்டவாளம் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இப்படி சோசியல் மீடியா பிரபலங்களை நம்பி ஏமாந்து போய்விடாதீர்கள் என்ற எச்சரிக்கை வீடியோக்களும் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த அழகி பணத்தாசை பிடித்தவர் என்ற விஷயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இந்த மோசடி புகாரும் சேர்த்ததில் அவருடைய பெயர் மொத்தமும் டேமேஜ் ஆகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவரை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கையும் இப்போது சரசரவென குறைந்து விட்டதாம்.

Also read: சீரியல் நடிகருடன் ஒட்டி உரசி நடித்து பிரபலமான நடிகை.. விஷயம் தெரிந்ததும் ருத்ர தாண்டவம் ஆடிய மனைவி