ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரே நாளில் சோசியல் மீடியாவை கலக்கிய அண்ணாச்சி.. 24 மணி நேரத்தில் குவிந்த கூட்டம்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை காணும் ஆவல் ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் இதில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் அண்ணாச்சியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை காண பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அண்ணாச்சி தற்போது சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறார். பொதுவாக அண்ணாச்சி பற்றிய எந்த விஷயமாக இருந்தாலும் தற்போது அதிக அளவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அண்ணாச்சி தற்போது ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர் ட்விட்டரில் அக்கவுண்ட் உருவாக்கிய 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு அண்ணாச்சியின் மீது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது 118.2 k பின் தொடர ஆரம்பித்துள்ளனர் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திரை பிரபலங்களுக்கு இருக்கும் மவுசு தற்போது அண்ணாச்சிக்கும் கிடைத்திருக்கிறது. அந்த அளவுக்கு அவரின் தி லெஜெண்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் சினிமாவில் நடிப்பதை ஒரு சிலர் கலாய்த்து, கிண்டலடித்து வந்தாலும் இவருடைய திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர். எப்படி என்றால் இவர் தி லெஜெண்ட் திரைப்படத்தின் போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் என அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்றும் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

Trending News