லைக்கா தலையில் இடியை இறக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 வில் ஒரு பாட்டுக்கு மட்டும் இத்தனை கோடியா?

Shankar – Indian 2 : இந்தியன் 2 படப்பிடிப்பு பல வருடங்களாக நடந்து வரும் நிலையில் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ஷங்கர், கமல், லைக்கா கூட்டணியில் இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இடையே ஆன பாடல் ஒன்று உருவாகி வருகிறது.

இது தவிர கமலுக்காகவும் சிறப்பாக ஒரு பாடல் எடுக்கப்பட இருக்கிறதாம். பொதுவாகவே ஷங்கர் படத்தில் பாடல்களுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் கமலுக்காக வைக்கப்பட்ட பாடலும் மிகப் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் லைக்கா இப்போது மிகுந்த பணம் நெருக்கடியில் இருக்கிறது. லால் சலாம் சருக்களை சந்தித்ததால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. அதோடு ரஜினியின் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. வேட்டையன் படத்தின் ஓடிடி உரிமையை விற்ற பிறகு தான் விடாமுயற்சி படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள்.

Also Read : கமல் கடைசி வரை கிட்ட சேர்த்துக்காத 5 நடிகர்கள்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

இப்போது லைக்கா நிறுவனத்தின் தலையில் இடியை இறக்கும்படி ஷங்கர் அதிர்ச்சியான விஷயத்தை கூறி இருக்கிறார். அதாவது இந்தியன் 2 வில் உருவாகும் கமல் பாடலுக்கு மட்டும் கிட்டத்தட்ட 30 கோடி பட்ஜெட் ஒதுக்க கேட்டிருக்கிறாராம். ஒரு பாடலுக்கு 30 கோடியா என லைக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்கனவே விடாமுயற்சி படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தலையை பியித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஷங்கர் மேலும் சுமையை ஏற்றுவது போல் ஒரு பாடலுக்கு 30 கோடி செலவு செய்ய இருக்கிறார். ஆனாலும் போட்ட பட்ஜெட்டை காட்டிலும் எப்படியும் இந்தியன் 2 பல மடங்கு வசூலை அள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : நடிப்பில் கமல் மிரட்டிய 5 கிளைமாக்ஸ் சீன்கள்.. கண் கலங்க வைத்த ‘அன்பே சிவம்’

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்