பாட்டுக்கு மட்டும் இவ்வளவு கோடியா.? ஷங்கர் அதிகமாக செலவு செய்த 5 சூப்பர் ஹிட் பாடல்கள்

இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது. அவருடைய மிகப்பெரிய யுக்தியை அனைவரையும் வியந்து பார்க்க வைப்பது தான். இவருக்கு ஏற்ற மாதிரி தயாரிப்பாளர்களும் இவர் கேட்ட பட்ஜெட்டை எப்படியாவது கடன் வாங்கியாவது கொடுத்து சங்கர் இஷ்டப்படி விட்டுவிடுவார். ஆனாலும் படத்துக்கு செலவு பண்ணா கூட பரவாயில்லை. பாட்டுக்கே அதிக கோடி செலவு பண்ணி இருக்கிறார். அப்படி இவர் கோடி கணக்கில் செலவு செய்த பாடல்களை பற்றி பார்க்கலாம்.

ஐ: 2015 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்திற்கும் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் உள்ள எல்லா பாடல்களும் ஹிட் ஆன நிலையில் இந்தப் பாடல்களை எடுப்பதற்காகவே சங்கர் மிகவும் மெனக்கெடு செய்திருக்கிறார். அதிலும் இப்படத்தில் உள்ள லேடியோ பாடலில் எமி ஜாக்சனின் மேக்கப் மற்றும் அவருடைய ட்ரஸ் அனைவரையும் வியந்து பார்க்க வைத்திருக்கும். இப்படத்திற்காக 5 கோடி வரை செலவு செய்திருக்கிறார்.

Also read: விவாகரத்து நடிகருடன் ஜோடி போடும் அதிதி சங்கர்.. மாவீரனுக்கு பிறகு வரிசை கட்டும் வாய்ப்புகள்

முதல்வன்: 1999 ஆம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முதல்வன். இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்த அனைவரையும் கவர்ந்தது. அதிலும் “அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே” இந்த பாடலுக்கு மட்டுமே 2 கோடி செலவு செய்து இருக்கிறார்.

2.0: சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு 2.0 திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் உள்ள அனைத்து பாடலுக்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். மேலும் சங்கர் மற்றும் ஏ ஆர் ரகுமான் என்றாலே பட்ஜெட் பெரிய அளவில் தான் இருக்கும். அதிலும் இப்படத்தில் வந்த “எந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே” இந்தப் பாடலுக்கு மட்டுமே 32 கோடி வரை செலவு செய்யப்பட்டிருக்கிறார்.

Also read: பொன்னியின் செல்வனால் லைக்காக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்.. சுத்தி போட்ட ஸ்கெட்ச், பதட்டத்தில் சுபாஸ்கரன்

கேம் சேஞ்சர்: எஸ் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் தெலுங்கில் உருவாகி கொண்டு இருக்கிறது. இப்படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு மட்டும் 23 கோடி செலவு செய்து மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

எந்திரன்: 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற “கிளிமஞ்சரோ மலை கனிமஞ்சரோ கன்னக் குழிமஞ்சரோ யாரோ யாரோ டைம்” இந்தப் பாடலுக்காக 4 கோடி செலவு செய்யப்பட்டு எடுத்திருக்கிறார்.

Also read: வளர்த்து விட்டுவிட்டவரை அடியோடு மறந்த விக்ரம்.. பொன்னியின் செல்வனை வைத்து கேரியரை ஓட்டும் பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்