16 வயது வித்தியாசம் உள்ள நடிகையை கரம்பிடிக்கும் சினேகன்.. கமல் தலைமையில் கல்யாணம்

தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியரான கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழில் பாண்டவர்பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், ராம், பருத்திவீரன் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

பாடல்கள் மட்டுமின்றி யோகி, உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் உள்ளிட்ட சில படங்களிலும் சினேகன் நடித்துள்ளார். தற்போது மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் வரும் 29ஆம் தேதி காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கவிஞர் சினேகனுக்கு சீர்திருத்தத் திருமணம் நடைபெற உள்ளது.

நடிகை கன்னிகாவும், சினேகனும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளனர். நடிகை கன்னிகா கே.பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடர் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரும்பிய கன்னிகா தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் உள்ளார்.

இதனையடுத்து கவிஞர் சினேகனுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

kannika
kannika