சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

போலியான அறக்கட்டளை நடத்திய சீரியல் நடிகை.. கட்டிப்பிடி வைத்தியர் சினேகன் அளித்த புகார்

பாடலாசிரியர் சினேகன் சின்னத்திரை நடிகை மீது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ள நிலையில், தற்போது சின்னத்திரை நடிகை பாஜக பிரமுகர் என செய்திகள் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் சினேகன் தமிழ் சினிமாவில் பல திரைப்பட பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். மேலும் உலக நாயகன் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இதனிடையே பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஒருவர் மீது சென்னை கமிஷனர் ஆபீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் கடந்த 2015ஆம் ஆண்டு சினேகன் அறக்கட்டளை என்ற பெயரில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை செய்து வருவதாகவும், அந்த அறக்கட்டளையின் முழு செலவையும் தனது வருமானத்தின் 40 சதவீதத்தில் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி என்பவர் சினேகன் அறக்கட்டளை என்ற பெயரில் போலியான ஒரு அறக்கட்டளையை தொடங்கி, அதன் மூலமாக பணம் வசூலித்து வருவதாக சினேகனுக்கு தகவல் வரவே, அவரை சந்தித்து இது குறித்து பேசுவதற்காக சினேகன் முற்பட்டுள்ளார்.

ஆனால் நடிகை ஜெயலட்சுமி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காததால் தனது வழக்கறிஞருடன் கமிஷனர் ஆபீஸில் அவர் மீது சினேகன் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனிடையே சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி பாஜக பிரமுகர் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ஒருவேளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்று நடைபெறுகிறதா என்பன உள்ளிட்ட பல செய்திகள் அரசல்புரசலாக வெளிவரும் நிலையில், சினேகனின் புகாருக்கு தற்போது வரை ஜெயலட்சுமி தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News