சினேகாவுக்கு 25 லட்சம் நாமம்.. கூடவே இருந்து குழிபறித்த நண்பர்

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரது சிரிப்பு அழகாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் இவரை புன்னகை அரசி என்ற அடைமொழியுடன் அழைத்து வந்தனர். இவரும் தன்னுடைய சினிமா கேரியரில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான்.

ஒருகட்டத்தில் சினிமா மார்க்கெட் குறைவதை அறிந்துகொண்ட சினேகா தான் நீண்ட காலமாக காதலித்துக் கொண்டிருந்த பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு சில வருடங்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சினேகா தற்போது தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் முன்னணி நடிகர்களுக்கு அண்ணி வேடத்தில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. பிரசன்னா சினேகா இருவருக்கும் பிரசாந்த் என்ற நெருங்கிய நண்பர் இருந்துள்ளார். சமீபத்தில் பிரசாந்த் சினேகா வற்புறுத்தி இருபத்தி ஐந்து லட்சத்தை புதிதாக தொடங்கப்பட்ட சிமென்ட் கம்பெனியில் போடுமாறு தொடர்ந்து அவர்களை பிரைன் வாஸ் செய்து முதலீடு செய்ய வைத்துள்ளார்.

முதலீடு செய்ததோடு சரி அதற்கு பிறகு எந்த லாபமும் கணக்கும் சினேகா பக்கம் வரவில்லையாம். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது சரியாக வரவில்லை என தற்போது போலீஸ் ஸ்டேஷன் படியேறி உள்ளார் சினேகா. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்காக கம்முனு இருந்த சினேகாவை உசுப்பேற்றி 25 லட்சத்தை நாமம் போட்டு வைத்துவிட்டார் அவரது நண்பர்.

நடிகைகள் சினிமாவில் இருக்கும்போதே வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க தேவையான அளவுக்கு பிசினஸில் முதலீடு செய்வார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிசினஸ் செய்ய ஆசைப்பட்டு 25 லட்சத்தை இழந்து நிற்கும் சினேகாவை பார்க்கும்போது பாவமாகத்தான் இருக்கிறது.

sneha
sneha
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்