கைராசியான எஸ்.ஜே சூர்யா நடித்து வெற்றி கண்ட 5 ஹீரோக்கள்.. விஷாலை தூக்கி விட்ட நடிப்பு அரக்கன்

SJ Suryah: விஜய் மற்றும் அஜித் என டாப் ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த எஸ் ஜே சூர்யா அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து அவரே ஹீரோவாகி நடிக்க ஆரம்பித்தார். இன்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடும் அளவுக்கு நடிப்பு அரக்கனாய் மாறிவிட்டார். அட இவர் எப்படித்தான் நடிக்கிறார் என கூட நடிப்பவர்களில் இருந்து, ரசிகர்கள் வரை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர், இந்த ஐந்து டாப் ஹீரோக்களின் படங்களின் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கிறார்.

மெர்சல்: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு சின்ன ரோலில் நடித்து இருப்பார். பின்னர் அதே கூட்டணி மெர்சல் படத்தில் இணைந்தது. டீசண்டான டாக்டர் வில்லனாக இந்த படத்தில் மிரட்டி இருப்பார். எஸ் ஜே சூர்யா வின் நடிப்பும் இந்த படத்தின் மிகப்பெரிய ஹிட்டிற்கு ஒரு முக்கிய காரணம்.

Also Read:2K கிட்சுக்கு கிடைத்த சில்க் தரிசனம்.. தியேட்டரையே அலறவிட்ட மார்க் ஆண்டனி

மாநாடு: சிம்பு இனிமேல் அவ்வளவுதான், சினிமா பக்கம் அவர் வரவே முடியாது என்று முடிவு கட்டியிருந்த நேரத்தில், அவருக்கு மாஸ் கம்பேக் கொடுத்த படம் தான் மாநாடு. ஒரு பக்கம் சிம்புவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், இந்த படத்தின் அடையாளமாக இருந்தது எஸ் ஜே சூர்யா தான். அவருடைய வசனங்கள் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் வைரலாக இருக்கிறது.

டான்: சிவகார்த்திகேயன் காலேஜ் ஸ்டுடென்ட்டாகவும் , எஸ் ஜே சூர்யா ஆசிரியராகவும் உருவாகும் ஒரு காம்போ எப்படி இருக்கும் என்ற கேள்வி எல்லா ரசிகர்களிடமும் இருந்தது. ஆனால் அந்தக் கேள்வியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடிப்பில் பட்டையை கிளப்பி விட்டார் எஸ் ஜே சூர்யா. இவர்கள் இருவருடைய காட்சிகள் படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது. சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் ஒரு மாஸ் ஹிட் படமாக அமைந்தது.

Also Read:முதலிரவு காட்சியில் விஷாலை கணித்த நடிகை.. இப்ப வர பருப்பு வேகாத கொடுமை

ஸ்பைடர்: மகேஷ் பாபு மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியான படம் தான் ஸ்பைடர். இந்த படம் நேரடி தமிழ் திரைப்படம் ஆக இல்லை என்றாலும் தமிழில் ரசிகர்களிடம் ரீச் ஆனதற்கு மிக முக்கிய காரணம் எஸ் ஜே சூர்யா மட்டும்தான். இந்த படத்தில் இவர் செய்த ஒரு சில முகபாவனைகள் இன்று வரை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மெட்டீரியலாக இருக்கிறது.

மார்க் ஆண்டனி: சில வருடங்களாக ஒரு வெற்றி படமாவது கொடுத்து விட மாட்டோமா என ஏங்கிக் கொண்டிருந்த விஷாலுக்கு மறு வாழ்க்கை கொடுத்திருப்பது மார்க் ஆண்டனி படம் தான். இந்த படத்தில் விஷால் வரும் காட்சிகளை விட, எஸ் ஜே சூர்யா வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. உண்மையை சொல்லப் போனால் அவருக்காக தான் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

Also Read:Mark Antony Movie Review- பல தோல்வியால் மூச்சு திணறிய விஷால், மார்க் ஆண்டனியாக தல தப்பினாரா.? முழு விமர்சனம்

- Advertisement -