தேனாண்டாள் பிலிம்ஸ் மீது கொலவெறியில் எஸ்ஜே சூர்யா.. 3 வருடமாக கிடப்பில் கிடக்கும் ஒத்த படம்

இயக்குனராக தன்னுடைய சிறந்த திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான எஸ்ஜே சூர்யாவுக்கு கிடைத்த வரவேற்பு அவர் நடிகரான போது ஆரம்பத்தில் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யா படம் என்றாலே 18 பிளஸ் படம் தான் என முடிவு செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம்பெறும். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை இயக்கினார்.

ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த எஸ் ஜே சூர்யா மீண்டும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜுக்கு அவரது ரீஎன்ட்ரீயில் மிகப் பெரிய பங்கு உண்டு.

இறைவி படத்தின் மூலம் நல்ல நடிகராக மறுபிறவி எடுத்த எஸ் ஜே சூர்யா அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார். செல்வராகவன் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவாகியிருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு சமீபத்தில் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த மூன்று வருடங்களாக கிடப்பில் கிடக்கும் மற்றொரு படத்திற்கும் விடிவு கிடைக்குமா என எஸ் ஜே சூர்யா மிகவும் மனம் நொந்துபோய் உள்ளாராம்.

டாப்ஸி நடித்த கேம் ஓவர் என்ற படத்தை இயக்கிய அஸ்வின் என்பவரின் இயக்கத்தில் இறவாகாலம் என்ற படம் உருவானது. அந்த படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பான நிலையில் தற்போது வரை அந்த படத்திற்கு விடை தெரியாமல் உள்ளனர் படக்குழுவினர்.

iravakkalam
iravakkalam

தன்னுடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இறவாகாலம் படம் தன்னுடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என உறுதியுடன் உள்ள எஸ் ஜே சூர்யா, தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இறவாகாலம் படத்தை பற்றி பேசி வருகிறாராம். விரைவில் இறவாகாலம் படத்திற்கு விடிவு காலம் வரும் என நம்பலாம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை