அந்த டாப் நடிகர் என்னோட தீவிர ரசிகர்.. சிலாகித்துக் கொள்ளும் எஸ் ஜே சூர்யா

தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னுடைய கேரியரை தொடங்கிய பின்னர் ஹீரோவாக மாறி தற்போது குணச்சித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

ஒரு கட்டத்தில் தன்னுடைய படங்களில் அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகளை வைத்து நடித்து வந்ததாக எஸ்ஜே சூர்யா மீது பல ரசிகர்களுக்கும் விருப்பம் இல்லாமல் இருந்தது.

குறிப்பாக பெண்கள் மத்தியில் எஸ் ஜே சூர்யாவின் மீதான பார்வை எப்போதுமே தப்பாகவே அமைந்தது. அதற்கு காரணம் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் அளவுக்கதிகமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது தான்.

ஆனால் தற்போது எஸ் ஜே சூர்யா முன்னாள் மாதிரி கிடையாது. தன்னுடைய படங்களில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள வகையில் அழகான எதார்த்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதிலும் கடைசியாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடப் பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாக உள்ளது.

ajith vijay sj surya
ajith vijay sj surya

இதற்கான பேட்டி ஒன்றில் செம சீக்ரெட் ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ் ஜே சூர்யா. அதாவது தளபதி விஜய் எஸ் ஜே சூர்யா வின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகராம். அதுவும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு நடுராத்திரியில் போன் பண்ணி மணிக்கணக்கில் பேசியதாகவும் எஸ் ஜே சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -