சென்னையை மையப்படுத்தி வெற்றியடைந்த 6 படங்கள்.. மூன்று படங்களைக் கொடுத்த ஒரே இயக்குனர்

தமிழ்நாட்டில் முக்கிய நகரமாக பார்க்கப்படுவது சென்னை. வந்தாரை வாழவைக்கும் சென்னையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு சென்னையை சுற்றி உள்ள இடங்களை மையமாக வைத்து வெற்றியடைந்த 6 படங்களை தற்போது பார்க்கலாம்.

சார்பட்டா பரம்பரை : பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் கொக்கன், கலையரசன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. சென்னையை சுற்றி உள்ள வட்டாரங்களில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

Also Read : சார்பட்டா படத்தின் வெற்றி.. சம்பளத்தை இரண்டு மடங்கு ஏற்றிய ஆர்யா

வடசென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றான வடசென்னை என்றாலே சண்டை, கத்தி, ரத்தம், கொலை என அடையாளப்படுத்தி உள்ளது. அதையே இந்தப்படமும் சொல்லியுள்ளது.

மெட்ராஸ் : பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கலையரசன், கேத்தரின் தெரசா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். வடசென்னையில் உள்ள பரபரப்பான ஏரியாவில் இருக்கும் சுவற்றுக்காக ஒரு கட்சியும், அதிலிருந்து பிரிந்து வந்த புதிய கட்சியும் போட்டி போடுவதே இப்படத்தின் கதை.

அட்டகத்தி : பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ், ஸ்வேதா நடிப்பில் வெளியான திரைப்படம் அட்டகத்தி. சென்னையை ஒட்டி உள்ள கிராமத்தில் உள்ள இளைஞனின் காதல் விளையாட்டுகள் மற்றும் கண்ணாமூச்சிகள் அட்டகத்தி படத்தின் கதை. அனைத்து வயதினரும் ரசிக்கும்படி இப்படத்தை அழகாக எடுத்து இருந்தார் இயக்குனர்.

Also Read : வடசென்னை படத்தில் வெற்றிமாறன் செய்த சில்லி மிஸ்டேக்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

மதராசபட்டினம் : ஏஎல் விஜய் இயக்கத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மதராசபட்டினம். சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த ஒரு காதல் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. சென்னையின் முந்தைய பெயரான மதராசப்பட்டினம் என்பதையே இப்படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டது.

புதுப்பேட்டை : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. அப்பாவியான இளைஞன் சூழ்நிலை காரணமாக எவ்வாறு தாதாவாக மாறுகிறார் என்பதே இப்படத்தின் கதை. தனுஷின் திரைப்பயணத்தில் புதுப்பேட்டை படம் முக்கிய திருப்பத்தை கொடுத்திருந்தது.

Also Read : தனுஷ் தேர்ந்தெடுத்த 3 நடிகைகள்.. கடைசி நேரத்தில் மாற்றியதால் தப்பித்த திருச்சிற்றம்பலம்