வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இயக்குனரை திருமணம் செய்த 6 ஹீரோயின்கள்.. காதலுக்கு அழகு முக்கியமில்லை என நிரூபித்த தேவயானி

முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சில ஹீரோயின்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்கள் கூட பணிபுரிந்த இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அப்படிப்பட்ட நடிகைகள் மற்றும் இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

சுஹாசினி : இவர் 1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கல்யாண காலம், ஆகாய கங்கை, கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். பின்பு 1988 திரைப்பட இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் 30 வருடத்திற்கு மேல் இல்லற வாழ்க்கையில் எந்தவித சர்ச்சைகளுக்கு உள்ளாகாமல் பரஸ்பர தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

Also read: தேவயானி, ராஜகுமாரன் காதலில் வெடித்த பூகம்பம்.. வெறியாய் சுற்றிய நகுல்

பூர்ணிமா: இவர் தமிழில் நெஞ்சில் ஒரு முள், கிழிஞ்சல்கள் போன்ற படங்களில் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தை பாக்யராஜ் இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் புரியும் போது இவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பிடித்ததால் இருவரும் காதலில் விழுந்து விட்டார்கள். பின்பு இவர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

ரோஜா: இவர் இயக்குனர் செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படத்தில் இருந்து இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து சூரியன் ,ராசையா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். பின்பு முன்னணி நடிகையாக வலம் வந்த இவருடைய மார்க்கெட் சற்று குறைய ஆரம்பித்த பொழுது இயக்குனர் செல்வமணி திருமணம் செய்து கொண்டார்.2002 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

Also read: கின்னஸ் சாதனை படைத்த ரோஜா.. ஒரே நேரத்தில் 3000 கிளிக்

தேவயானி: இவர் தமிழில் தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து காதல் கோட்டை, பூமணி, சூரிய வம்சம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். பின்பு இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் நீ வருவாய் என படத்தின் மூலம் இவர்கள் இருவரும் சந்தித்தார்கள். இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் அடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தில் மூலம் இவர்களிடையே காதல் மலர்ந்தது. பின்பு ராஜகுமாரன் இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக தேவயானியை நடிக்க வைத்தார். காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்று அழகாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தேவயானி. மேலும் 2001 ஆம் ஆண்டு திருத்தணி முருகன் கோவில் ரகசியமாக இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

நயன்தாரா: இவர் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா நடிகைக்கும் டஃப் கொடுத்தார். பின்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா. இந்த படத்தில் இருந்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதிலிருந்தே இவர்கள் ஒரு உறவில் இருந்து வந்தார்கள். பின்பு கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். பிறகு இவர்கள் கல்யாணம் ஆகி 5 மாதத்திலேயே இரட்டைக் குழந்தைகளை பெற்று எடுத்ததாக அறிவித்தார்கள்.

Also read: நயன்தாராவை வைத்து அஜித்துக்கு கொடுக்கப் போகும் நோஸ்கட்.. புளியங்கொம்பை பிடித்த விக்னேஷ் சிவன்

- Advertisement -

Trending News