அந்த படத்தில் நடிக்க கேட்ட இயக்குனர்.. பொட்டிய மூடிட்டு கெளம்பு என்ற 39 வயது நடிகை

பிரபல இயக்குனர் ஒருவர் மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடிகையிடம் அந்த நடிகைக்கு விருப்பமான கேரக்டர் கொண்ட படம் ஒன்றில் நடிக்க கேட்டதற்கு டென்ஷனாகி இயக்குனரை வெளியில் துரத்தி விட்டாராம்.

அக்கட தேசத்தில் கவர்ச்சி கன்னியாக பல இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வந்தவர் தான் அந்த உயரமான நடிகை. சுமார் ஆறடி இருக்கும் அந்த நடிகை நீச்சல் உடையில் நடித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

அப்பவே அனைத்து ரசிகர்களும் பிளாட். ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பல நடிகர்களுக்கும் அந்த நடிகை மீது ஒரு கண்ணு இருந்து கொண்டே இருந்ததாம். அக்கட தேசத்தில் மட்டும் காட்டினால் எப்படி என, இக்கட தேசத்திற்கும் கூட்டி வந்தவர் தான் அந்த காமெடி இயக்குனர்.

முதல் படத்திலேயே ஒரு பீச் பாடல் காட்சி. அவ்வளவுதான் மொத்த தமிழ் ரசிகர்களையும் கசக்கி கைக்குள் வைத்துக் கொண்டார். சரி இந்த நடிகை கிளாமருக்கு மட்டும் தான் சரிபட்டு வருவார் போல என நினைத்த நேரத்தில் திடீரென சோலோ ஹீரோயினாக த்ரில்லர் படத்தில் நடித்து மிரள விட்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை கமர்ஷியல் படங்களில் மட்டும் அல்லாமல் சோலோ ஹீரோயின் படங்களிலும் நடித்து வசூல் சாதனைகள் புரிந்து வருகிறார். இந்த நடிகைக்கு பிரம்மாண்ட சரித்திர திரைப்படங்கள் என்றால் இன்னும் கூடுதல் சந்தோசம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு இளம் பெண் போராளியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ஒருவர் அந்த நடிகையை சந்தித்துள்ளார். ஆனால் சம்பள விஷயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அடிமட்ட விலைக்கு நடிகையை நடிக்க கேட்டதால் உங்களது பணப்பெட்டியை மூடிக்கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் என விரட்டி அடித்து விட்டாராம் அந்த நடிகை. அதன் பின்னர் வந்த வாய்ப்பையும் விட்டு விட்டோமோ எனவும் புலம்பினாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்