ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குணச்சித்திர கேரக்டரில் வெற்றி கண்ட 6 நடிகர்கள்.. ஹீரோவையே மிஞ்சும் காளி வெங்கட்

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் ஹீரோவுக்கு இணையாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் சில கேரக்டர்கள் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களின் கதாபாத்திரம் அந்த படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட நடிகர்கள் எந்த படத்தில் எந்த மாதிரியான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

எம்.எஸ்.பாஸ்கர்: கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், மதுசூதன ராவ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்தார்கள். இப்படம் காவல்துறையில் பயிற்சி தொடர்பான நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இதில் எம்.எஸ் பாஸ்கர் அபாரமான மற்றும் எதார்த்தமான நடிப்பை காட்டி இருக்கிறார். இப்படத்தில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவில் பாராட்டுகளை பெற்றிருக்கிறார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.

Also read: கவுண்டமணி பெஸ்ட் சக்ஸஸ்ஃபுல் 5 ஹீரோக்கள்.. செந்திலுக்கே டஃப் கொடுத்த சத்யராஜ்

கலையரசன்: பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஜாதி, அரசியல் இவைகளை வைத்து படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் கலையரசன் குணச்சித்திர கேரக்டரில் நடித்து இவருடைய நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

மு.ராமசாமி: சி.எஸ்.மஹிவர்மன் இயக்கத்தில் கடந்த வருடம் மே மாதம் வாய்தா திரைப்படம் வெளிவந்தது. இதில் நாசர் மற்றும் மு.ராமசாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு ஏழை சலவைத் தொழிலாளி சாலை விபத்தில் காயமடைந்ததால் அதற்காக நீதி கேட்டு போராடுவதை படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் மு.ராமசாமி ஒரு யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி மக்களிடமிருந்து இவருடைய நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

காளி வெங்கட்: கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கடந்த வருடம் கார்கி திரைப்படம் வெளிவந்தது. இதில் சாய் பல்லவி, காளி வெங்கட், சரவணன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் க்ரைம் திரில்லர் திரைப்படம் ஆக வெளிவந்தது. இதில் தன் அப்பாவை நிரபராதி என்று நிரூபிக்க போராடும் பெண்ணுக்கு மிகவும் உதவியாக காளி வெங்கட் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவில் பாராட்டுகளை பெற்றிருப்பார். இதில் ஹீரோவின் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு இவரது நடிப்பு இருக்கும். இப்படம் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினியின் 5 காமெடி படங்கள்.. மீசையை வைத்து தேங்காய்-வை படுத்திய பாடு

பகத் பாசில்: கடந்த வருடம் ஜூன் மாதம் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்திற்கு பகத் பாசில் நடிப்பு ஒரு நல்ல சப்போட்டாக அமைந்திருக்கிறது. இதில் இவருடைய எதார்த்தமான நடிப்பு மிகவும் பாராட்டுகளை பெற்றது. சிறந்த குணச்சித்திர கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை மிரட்டி இருப்பார். இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது.

பாபி சிம்ஹா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மகான் திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், ராகவன், சிம்ரன், துருவ் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விக்ரமுக்கு ஒரு நல்ல நண்பனாக பாபி சிம்ஹா நடித்திருப்பார். இவருடைய கேரக்டர் ஹீரோக்கு இணையாக அமைந்திருக்கும். இவரின் நடிப்புக்கு அதிக அளவில் பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

Also read: காமெடி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிய 5 நடிகைகள்.. சந்தானத்தின் காதலியாக மாஸ் காட்டிய ஜாங்கிரி

- Advertisement -

Trending News