கத்துக்குட்டி நடிகரின் விஸ்வரூபத்தை பார்த்து மிரண்ட அஜித்.. இரவோடு இரவாக செய்த காரியம்

அஜித் எப்போதுமே எல்லா விஷயத்திலும் கண்ணும் கருத்துமாய் இருப்பவர். ஆனாலும் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக அவர் அதிக ரிஸ்க் எடுக்கவும் தயங்க மாட்டார். அதனாலயே அவருக்கு இதுவரை பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமே அவருக்கு பைக் ரேஸ் மீது இருந்த மிகுந்த ஆர்வம் தான்.

அதனால் எதையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து ஒரிஜினலாக ஸ்டன்ட் செய்வார். அதுமட்டுமில்லாமல் அவர் எல்லா வேலைகளையும் முழு கவனம் செலுத்தி டெடிகேஷன் ஆக வேலை செய்வார். அத்துடன் ரசிகர்களுக்காகவும் அதிக கவனம் எடுத்து நடித்து வருகிறார்.

Also read: சென்சாரால் மீண்டும் துணிவுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. வசூலுக்கு வச்ச பெரிய ஆப்பு

மேலும் அவர் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருக்கக் கூடியவர். அப்படிப்பட்டவரே வியந்து நிற்கும் அளவிற்கு ஒரு நடிகரின் தோற்றம் இருந்திருக்கிறது. அவர் பார்த்து மிகவும் மிரண்ட அந்த நடிகர் தான் பரத். அஜித் பார்த்து வியந்து போகும் அளவிற்கு பரத் அப்படி என்ன செய்துவிட்டார் என உங்களுக்கு தோன்றலாம். அதாவது அவர் கஷ்டப்பட்டு தன் உடலை சிக்ஸ் பேக் வைத்து மாற்றி இருக்கிறார். அதைப் பார்த்து அஜித்தும் ஆசைப்பட்டிருக்கிறார்.

பரத் என்னதான் சிக்ஸ்பேக் வச்சிருந்தாலும் ஆரம்ப காலத்தில் சின்ன சாக்லேட் பாய் என்று வலம் வந்தவர் தான். அதன் பின் ஆக்சன் மூவியில் களமிறங்கினார். அதுவும் அவருக்கு பெரிய அளவில் நன்றாக அமையவில்லை. பின்பு 555 படத்திற்காக சிக்ஸ் பேக் தேவைப்பட்டது. இதற்காக ஜிம் சென்று முறையாக டிரெய்னிங் செய்து சிக்ஸ் பேக் வைத்து கட்டுமஸ்தான உடம்புடன் வந்தார்.

Also read: அஜித் சார் கிட்ட இருந்து எல்லாரும் இந்த 3 விஷயத்தை கத்துக்கணும்.. பூரிப்புடன் பகிர்ந்துகொண்ட ஹெச்.வினோத்

அவரைப் பார்த்து வியந்து மிரண்டு போனார் அஜித். உடனே அவருடைய ஜிம் டிரைனர் சிவாவை இரவோடு இரவாக போன் போட்டு வர வைத்திருக்கிறார். பிறகு அவரின் ஜிம் ட்ரெயினரிடம் தனக்கும் அதே மாதிரி கோச்சிங் கொடுக்க சொல்லி இருக்கிறார். அவர் கொடுத்த டிரைனிங் மூலமாகத் தான் ஆரம்பம் படத்தில் அஜித்திற்கு கட்டுமஸ்தான உடம்பை கொண்டு வந்தாராம்.

இவர் ஆசைப்பட்ட மாதிரி ஆரம்பம் படத்தில் இவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அஜித் என்னதான் மாஸ் ஹீரோவா இருந்தாலும் கத்துக்குட்டியான நடிகர் பரத்தின் தோற்றத்தைப் பார்த்து வியந்திருக்கிறார். இவருக்கு அளவுக்கு அதிகமான நடிப்பின் மீது இருந்த ஆர்வமே இதற்கு காரணம். இவரின் விடா முயற்ச்சியே இவரை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்கிறது.

Also read: ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் விமர்சனத்திற்கு ஒரு கோடி சம்பளமா? அலறிய துணிவு வட்டாரம்

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -