கல்யாணத்துக்கு முன்பே வளைகாப்பு நடத்திய 5 நடிகைகள்.. குழந்தையுடன் தாலி கட்டிய எமி ஜாக்சன்

Amy Jackson : கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதெல்லாம் பழைய காலம் என்று சில நடிகைகள் புதிய ட்ரெண்டை பின்பற்றியுள்ளனர். அதாவது திருமணத்திற்கு முன்பே வளைகாப்பு நடத்தி விட்டு அதன் பிறகு கல்யாணம் செய்துள்ளனர்.

அமலா பால்

ஏஎல் விஜய் அமலாபால் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களினால் இருவரும் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது நெருங்கிய நண்பரை அமலா பால் திருமணம் செய்து கொண்டார். திருமணமான குறுகிய காலத்திலேயே தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அமலா பால் வெளிப்படுத்தினார்.

எமி ஜாக்சன்

ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் எமி ஜாக்சன். இவருக்கு 2019 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு தான் ஜார்ஜ் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை எமி அறிவித்தார்.

இலியானா

விஜய்யின் நண்பன் படத்தில் நடித்தவர் தான் இலியானா. இவர் பாலிவுட்டில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். இவருக்கு 2023 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தற்போது வரை தன்னுடைய குழந்தைக்கான தகப்பன் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்.

அலியா பட்

பாலிவுட் நடிகை அலியா பட் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் நவம்பர் மாதமே இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்தது உறுதியாகி உள்ளது.

ஸ்ரீதேவி

தமிழ் மற்றும் பாலிவுட் மொழிப்படங்களில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது ஸ்ரீதேவி கர்ப்பமாக இருந்தார். அதன் பிறகு ஜான்வி கபூர் பிறந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்