பிரபல தொகுப்பாளினி இடத்தை ஆக்கிரமித்த சிவாங்கி.. அவரே வெளியிட்ட வைரல் பதிவு

விஜய் டிவியின் செல்ல குழந்தை சிவாங்கி, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சூப்பர் சிங்கர் கன்டஸ்டன்ட் ஆக வந்து இப்போது சூப்பர் சிங்கர் ஆங்கர் ஆயிட்டாங்க. சூப்பர் சிங்கர்ல இவங்க செஞ்ச சேட்டையும் பாடுன பாட்டுகள் எல்லாம் ரசிகர்கள் ரொம்ப ரசிக்க வைத்தது.

சிவாங்கி ஒரு இடத்துக்கு போனா அந்த இடத்தையே அவங்களுக்கு ஏத்த மாதிரி ரொம்ப ஜாலியா மாற்றிடுவார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். புகழை சிவாங்கி அண்ணன் என்று அழைப்பதும், அவரும் சிவாங்கி தங்கச்சி என இருவரும் உண்மையான அண்ணன் தங்கச்சி போலவே இருப்பார்கள்.

நடிகர் அஸ்வின், சிவாங்கி காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் ஆங்கர் சிவாங்கி என்று ஒரு கதவில் உள்ளது.

அதைப்பற்றி சிவாங்கி கூறுகையில் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி சூப்பர் சிங்கருக்கு இதே ஃப்ளோர்ல, இதே செட்ல கன்டஸ்டன்ட் வந்தேன். இப்போது ஒரு ஆங்கரக மாறி இருக்கேன். இந்த செய்திக்கு அப்புறம் நம்ப பிரியங்கா தேஷ்பாண்டே பிக் பாஸ்க்கு போறது தெரிய வந்திருக்கிறது.

sivaangi
sivaangi

இந்த வாரம் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பிரியங்கா இடத்தில் மா.கா.பா உடன் தீனா தான் சேர்ந்து பண்ணிட்டு இருக்கிறார். ஸ்டார்ட் மியூசிக்லயும் பிரியங்கா இல்லாமல் மாகாபா மட்டும் தான் தொகுப்பாளராக பண்றாரு. இதனால் சிவாங்கி போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கரில் நிகழ்ச்சியில் மா.கா.பாவுடன் தொகுப்பாளராக இணைய சிவாங்கிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்