வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இமானுக்கு வந்த மிரட்டல்.. ஒரே வீடியோவால் காலியாக போகும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்

Sivakarthikeyan-Imman: கடந்த சில நாட்களாகவே ஒட்டு மொத்த மீடியாவையும் புரட்டி போட்டு வரும் ஒரு விஷயம் தான் இமான், சிவகார்த்திகேயன் விவகாரம். நிச்சயம் இப்படி ஒரு விஷயத்தை யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. அந்த அளவுக்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைத்த இமானின் பேட்டி இப்போது அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அவர் கூறியதில் இருந்து அது என்ன மாதிரியான சம்பவமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். அதைத் தொடர்ந்து வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி, தம்பி மாதிரி நினைத்தவருக்கு சிவகார்த்திகேயன் செய்த கேடு கெட்ட செயல் மன்னிக்க முடியாதது என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி எரிந்த நிலையில் சிவகார்த்திகேயன் நல்லவர் வல்லவர் என்ற கருத்துக்களும் பரவ தொடங்கியது. ஆனால் தன்னுடைய இணைய கூலிப்படை மூலம் அவர் தான் இது போன்ற விஷயங்களை பரப்பி பிரச்சனையை அமுக்க பார்க்கிறார் என பிஸ்மி கூறி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் வெளிப்படையாக ஒரு விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். அதாவது இமானின் பேட்டி வெளிவந்த சில நிமிடங்களில் வைரலாக தொடங்கிய நிலையில் சிவகார்த்திகேயன் அவருக்கு போன் செய்து அதை டெலிட் செய்யுமாறு கெஞ்சி இருக்கிறார். போகப் போக அது மிரட்டல் ஆகவும் மாற தொடங்கி இருக்கிறது.

அது அத்தனையும் ரெக்கார்ட் செய்யப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இமானுக்கு நடந்த துரோகத்திற்கு காரணமான வீடியோவையும் நான் பார்த்துவிட்டேன் என்று பிஸ்மி கொந்தளிப்புடன் பேசி உள்ளார். அவர் இப்படி பேசுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் ஆதாரம் வெளியாகி விடுமா என்ற யூகமும் ஏற்பட்டுள்ளது.

அந்த அளவுக்கு அவர் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டை ஆணித்தரமாக வைத்துள்ளார். மேலும் இந்த ஒரு வீடியோவால் அவருடைய மார்க்கெட் காலியாகி விடும் எனவும் பேசியுள்ளார். ஏனென்றால் திரையில் பார்க்கும் முகம் வேறு நிஜத்தில் வேறு என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. ஆக மொத்தம் நம்ம வீட்டுப் பிள்ளையாக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

Trending News