ஒரே பேட்டியில் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உடைத்த இமான்.. வாயை திறக்காத மாவீரன், நிஜ வாழ்க்கையில் அக்மார்க் வில்லன்

Sivakarthikeyan-D Imman: இன்று காலை முதலே சோசியல் மீடியா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டி இமான், சிவகார்த்திகேயன் பற்றி வெளிப்படையாக கூறிய ஒரு விஷயம் தான். இதை கேள்விப்பட்ட பலரும் நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்டவர் இன்னும் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கிறார்.

இதன் மூலம் அவர் உண்மையை ஒப்புக்கொள்கிறாரா என்ற கேள்விகளும் ஒரு பக்கம் அலையாய் எழுந்துள்ளது. அந்த வகையில் டி. இமான் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரும் துரோகத்தை செய்துவிட்டார் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால் அது என்ன மாதிரியான துரோகம் என்பதை மட்டும் அவர் சொல்ல மறுத்துவிட்டார். ஏனென்றால் இதனால் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார்.

அப்போதே இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்ற ஒரு செய்தி தீயாக பரவியது. மேலும் இமானின் முதல் மனைவியும் சோசியல் மீடியாவில் தன் கோபத்தை வெளிக்காட்டி இருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

இமான் அந்த பேட்டியில் எனக்கு நடந்த துரோகத்திற்கு சிவகார்த்திகேயனும் முக்கிய காரணம். ரொம்ப நாட்கள் கழித்து தான் இதை நான் கண்டுபிடித்தேன். அதை தாங்க முடியாமல் அவரிடம் இது குறித்து கேட்டேன் என்று கூறிய இமான் அதற்கு அவருடைய பதில் என்ன என்பதை மட்டும் பொதுவெளியில் சொல்ல மறுத்துவிட்டார்.

மேலும் எந்த தப்பிற்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் அதை மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வளவு கூறிய அவர் சிவகார்த்திகேயனை எந்த இடத்திலும் மரியாதை குறைவாக பேசவில்லை. அதை தான் ரசிகர்கள் இந்த மனுஷனுக்கு துரோகம் பண்ண அவருக்கு எப்படி மனசு வந்துச்சு என கேட்டு வருகின்றனர். இப்படி நிஜத்தில் அக்மார்க் வில்லனாக இருக்கும் சிவகார்த்திகேயனின் முகத்திரையை இமான் ஒரே பேட்டியில் கிழித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்