வேங்கை ஒரு பக்கம் சிங்கம் மறுபக்கம் நடுவில் மாட்டிய சிவகார்த்திகேயன்.. கமலுக்கு நோ சொன்ன ஏஆர் முருகதாஸ்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனுக்கு எத்தனை தடங்கள் அவமானங்கள் வந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றியை நோக்கி மட்டுமே பயணித்து வருகிறார்.

நான் கொடுக்கிற ஒவ்வொரு வெற்றியும் தான் என்னை பற்றி தாழ்வாக பேசியவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும் என ஒவ்வொரு படத்திலும் அவருடைய முன்னேற்றத்தை காட்டி வருகிறார்.

அதனால் தான் அவருடைய படங்கள் வசூல் அளவில் நஷ்டம் அடையாமல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் கமிட் ஆகி நடித்த வருகிறார்.

இதற்கு அடுத்தபடியாக ஏஆர் முருகதாசுடன் கூட்டணி வைத்து எஸ்கே 23வது படத்திற்கும் பிள்ளையார் சுழியை போட்டுவிட்டார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் ஜருராக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கிடையில் அமரன் படப்பிடிப்பும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது.

ஏஆர் முருகதாஸ் வைத்த செக்

அதனால் இதை முடிப்பதற்கு கமல், எஸ்கேவை கூப்பிட்டு இருக்கிறார். ஆனால் முருகதாஸ் இப்படத்திற்கான உடல் தோற்றம், ஸ்டைல் எல்லாமே ரொம்பவே வித்தியாசமாக இருக்க வேண்டும். அதனால் மீண்டும் உங்கள் படத்தின் படப்பிடிப்புக்கு அவர் வந்து நடித்துக் கொடுத்தால் எல்லாமே இங்கே சொதப்பிவிடும் என்று சொல்லி கமல் கூப்பிட்டதற்கு போக கூடாது என்று மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனால் சிவகார்த்திகேயன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் வேங்கை ஒரு பக்கம் சிங்கம் இன்னொரு பக்கம் என்று சொல்வது போல் நடுவில் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார். ஆனாலும் சிவகார்த்திகேயனுக்கு வேற வழி இல்லை. அமரன் படத்தை முடித்தால் மட்டும்தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் பண்ண முடியும்.

அதனால் ஏஆர் முருகதாஸிடம் கெஞ்சியாவது அமரன் படப்பிடிப்பை கமல் நிலைத்த படி முடித்து விடுவார். இதற்கு அடுத்ததாக எஸ்கே 24 படத்தை சிபி சக்கரவர்த்தி மற்றும் எஸ்கே 25 வெங்கட் பிரபு என்ற ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் ஒருத்தர் தான் கிடைக்கிற சான்சை சரியாக பயன்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்