வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜோடி சேர்ந்த ஹீரோயினை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்.. துல்கரின் காதலிக்கு வீசியவலை

கோலிவுட்டில் மிகக் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை தொட்ட நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன்வசம் இழுத்துள்ளார். இப்படியாக பல ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் ஏற்கனவே தனது படத்தில் ஜோடி சேர்ந்த நடிகையை டீலில் விட்டுள்ளார்.

தற்பொழுது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் மாவீரன். இதில் இவருடன் அதிதி சங்கர் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இதில் வில்லனாக பிரபல இயக்குனர் மிஸ்கின் அவர்கள் நடித்து வருகிறார். மேலும் நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தற்பொழுது படத்தின் சூட்டிங் ஆனது படுஜோராக நடந்து வருகிறது.

Also Read: மீண்டும் சிவகார்த்திகேயனை டார்கெட் செய்யும் கார்த்தி.. ஒதுங்கி போனாலும் விடாத தொல்லை

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்பொழுது  இந்த படத்திற்கு ஹீரோயின் தேடும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பிரியங்கா மோகனின் பெயர் அடிபட்ட நிலையில் ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களில்  ஜோடி சேர்ந்து நடித்துள்ளதால் குட் பாய் சொல்லியுள்ளார் சிவா.

அதிலும் சிவா தான் அவருக்கு ஒரு நம்பிக்கையான நடிகராக சினிமாவில் செயல்பட்டு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இவருடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகனை தற்பொழுது டீலில் விட்டுள்ளார். இவர்கள் நடித்த  படங்கள் 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஏறிய வேகத்திலேயே சறுக்கிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த எடுத்த அதிரடி முடிவு

மேலும் இவரின் அடுத்த படத்தில் ஹீரோயினியாக நடிக்க துல்கரின் காதலிக்கு வலைவீசி உள்ளார். கடந்த ஆண்டு ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் சீதாராமன். காதல் காவியமாக வெளிவந்த இப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இதனை அடுத்து இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த மிருணாள் தாகூர் இடம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நடிக்க, துல்கர் சல்மானின் காதலிக்க விரித்த வலையில் தற்பொழுது தனுஷ் பட நடிகை சாய்பல்லவிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

Also Read: லோகேஷ் நண்பரால் சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை.. இப்படி SK-வை அசிங்கப்படுத்த என்ன காரணம்!

- Advertisement -

Trending News