வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சமாதான தூது விட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே பாசப்போராட்டமா இருக்கே!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் அயலான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும், தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அருண் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஆன பிரச்சனை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அதாவது சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளியானபோது அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் யாரெல்லாம் ஹீரோவா ஆகிறது என்ற விவஸ்தையே இல்லாம போச்சு. மக்களுக்கு தெரியும் யார் உண்மையான ஹீரோ என்பது என அருண் விஜய் பதிவிட்டிருந்தார். மேலும் சிறிது நேரத்திலேயே அந்த பதிவு நீக்கப்படும் இருந்தது.

அருண் விஜய் மறைமுகமாக சிவகார்த்திகேயனை தான் தாக்கி இவ்வாறு பேசி உள்ளார் என அவரது ரசிகர்கள் அருண் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது அந்த பதிவு நான் போடவில்லை என அருண் விஜய் மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய் மகனின் பிறந்த நாள் போது சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும் சமீபத்தில் யானை படத்தின் பிரஸ்மீட்டில் சிவகார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என பேட்டியாளர் கேள்விக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அதை கிளப்பிவிட்டதே நீங்கள் தான் என அருண்விஜய் பதிலளித்திருந்தார். இந்நிலையில் இன்று அருண்விஜயின் யானை படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதனால் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவழியாக இன்று யானை படம் உலகம் முழுவதும் வெளியாகிறது என பதிவிட்டிருந்தார். உடனே சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அருண் விஜய்யின் அந்த ட்வீட்டை பதிவிட்ட வாழ்த்துக்கள் அண்ணா என குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அருண்விஜய்க்கு ட்விட்டர் மூலம் சமாதானத் தூதுவிடுகிறார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

Trending News