ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தின் மொத்த பிஸ்னஸ் ரிப்போர்ட்

டான் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. அனுதீப் இயக்கத்தில் மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது.

வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நேரடியாக தெலுங்கில் அறிமுகம் ஆகிறார். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது பல கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.

Also read : சிவகார்த்திகேயனுக்கு ஈடுகொடுத்து ஆடும் பிரின்ஸ் பட நடிகை.. பிம்பிளிக்கி பிளாப்பி லிரிகல் விடியோ

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் வாங்கியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைக்கான தொகை மட்டுமே 42 கோடி அளவுக்கு வசூல் ஆகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் தியேட்டர் உரிமையும் நல்ல லாபத்தில் வியாபாரம் ஆகி இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டுமே 30 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 6.5 கோடி ரூபாயும் வசூல் ஆகியுள்ளது.

Also read : பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம்.. 26 நாட்களுக்கு இத்தனை கோடியா?

இதைத்தொடர்ந்து கர்நாடகாவின் தியேட்டர் உரிமை 1.9 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் 6 கோடிக்கும், கேரளா தியேட்டர் உரிமை 60 லட்சத்திற்கும் பிசினஸ் ஆகி இருக்கிறது. அந்த வகையில் இந்த மொத்த பிஸினஸ் கணக்கு மட்டுமே 90 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் இப்படத்தை தெலுங்கில் சொந்தமாகவே வெளியிட இருக்கிறார் அதனால் அங்கும் இப்படம் எக்கச்சக்கமாக வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் முதலாவது நாளிலேயே 100 கோடி ரூபாயை தாண்டி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also read : மிகப்பெரிய பிசினஸில் பிரின்ஸ்.. பல கோடியில் கல்லா கட்ட தயாராகும் சிவகார்த்திகேயன்