பிரபல இயக்குனருக்கு அநியாயத்திற்கு சோப்பு போடும் சிவகார்த்திகேயன்.. எல்லாம் ஒரு ஹிட்டுக்கு தான்!

ஹீரோ படத்தின் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன்(sivakarthikeyan) நடிப்பில் அடுத்ததாக டாக்டர் படம் வெளியாக இருந்தது. ஆனால் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டதால் டாக்டர் படத்தின் வெளியீடு எப்போது என்பதை தெரியவில்லை.

இதற்கிடையில் டாக்டர் படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக போவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற படத்திலும், அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் இயக்கும் ஒரு படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சீராக நடந்து வரும் நிலையில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிப்பதற்காக நீண்ட நாட்களாக ஒரு இளம் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் ஐஸ் வைத்துக் கொண்டிருக்கும் விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் முதல் சிறிய நடிகர்கள் வரை அனைவரும் பாராட்டித் தள்ளி விட்டனர்.

இதனால் உடனடியாக அந்த இயக்குனருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக கொடுத்து அடுத்த படத்தை தமக்காக செய்ய வேண்டும் என சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலேயே துண்டு போட்டு வைத்து விட்டாராம்.

ஆனால் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு கிடைப்பதற்கான அனைத்து அம்சங்களும் அமோகமாக இருப்பதால் அங்கு அந்த பக்கம் தாவி விடுவாரோ என பயந்து கொண்டு அளவுக்கு அதிகமாக ஐஸ் வைத்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். ஒரு படம் ஹிட் வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க என கோலிவுட் வட்டாரமே சிவகார்த்திகேயனைப் பார்த்து கிண்டலடிக்கிறதாம்.

sivakarthikeyan-desingu-periyasamy
sivakarthikeyan-desingu-periyasamy
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்