புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரு கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்க நினைக்கும் சிவகார்த்திகேயன்.. கமலை வைத்து கல்லா கட்ட திட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அடுத்தடுத்த படங்களிலும் மும்மரம் காட்டி வருகிறார். அதன்படி அடுத்ததாக கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணுகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாவீரன் படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சிவகார்த்திகேயன் திட்டம் போட்டுள்ளார். அதாவது மாவீரன் படத்தில் கமலை இழுத்து விட நினைக்கிறார்.

Also read: சிவகார்த்திகேயன் காலை வாரிய சின்ன தம்பி.. நான் இருக்கேன் என்று கைகொடுக்கும் பெரிய தம்பி

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதால் நெருங்கி பழகி வருகிறார்கள். இதை சாக்காக வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காவை அடிக்க சிவகார்த்திகேயன் திட்டம் போட்டுள்ளார். அதாவது மாவீரன் படத்தில் பேக்ரவுண்ட் வாய்ஸ் ஒன்று வேண்டுமாம்.

அதற்காக கமலை தேர்ந்தெடுக்கலாம் என சிவகார்த்திகேயன் கூறி உள்ளாராம். ஏனென்றால் ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் கமல் குரல் கொடுத்திருப்பார். மாவீரன் படத்தில் ஃபேமிலியரான வாய்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவும் கூறியுள்ளதாம்.

Also read: தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த சிவகார்த்திகேயன்.. சீமராஜா படத்திற்கு வாங்கிய சம்பளம்

ஆகையால் சிவகார்த்திகேயன் கமலிடம் எளிதாக பேசி சம்மதம் வாங்கி விடலாம் என காத்திருக்கிறார். இப்போது கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். தென் அமெரிக்காவில் இருந்த அவர் வந்த பிறகு சிவகார்த்திகேயன் கமல் இடம் இது குறித்து பேச உள்ளாராம்.

மேலும் கமலும் இதற்கு சம்மதிப்பார் என தெரிகிறது. சிவகார்த்திகேயன் படத்தில் கமலின் குரலா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு உள்ளதால் இதை வைத்தே கல்லா கட்டலாம் என திட்டம் தீட்டியுள்ளார். சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் படங்களை போல மாவீரன் படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கிறார்.

Also read: சிவகார்த்திகேயனை பழி தீர்க்க களமிறங்கும் தனுஷ்.. இந்த வாட்டி சும்மா விடுறதா இல்ல

- Advertisement -

Trending News