விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனின் ஒரே ட்விட்க்கு இத்தனை லட்சம் சம்பளமா.? கூட இருந்து குழி பறிக்கும் விசுவாசிகள்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி இவர்கள் இருவருக்கும் சமீபகாலமாக அதிகப்படியான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன இதனால் நாளுக்கு நாள் இவர்களது சம்பள பட்டியலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களாக உள்ளனர்.

நடிகர்கள் பொருத்தவரை எந்த செயல் செய்தாலும் அதில் வருமானம் வாங்காமல் செய்ய மாட்டார்கள் அப்படி பல நடிகர்களும் வலைத்தள பக்கத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு பல லட்சம் ரூபாய் வாங்கி வருகின்றனர். ஒரு சில நடிகர்கள் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தான் இவ்வளவு அழகாக இருப்பதாக கூறி கூட பலரும் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் புரமோஷன் செய்து வருகின்றனர்.

ஆனால் ரசிகர்கள் அதனை நம்பி பலரும் ஏமாந்து வருகின்றனர். சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் ஒரு படத்தை பற்றி ப்ரோமோஷன் செய்வதற்கும் ட்விட் போடுவதற்கும் பல லட்சம் வாங்குவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கும் அதனைப் பற்றி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ட்விட் போடுவதற்கும் 5 லட்சம் ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது .

விஜய் சேதுபதி ஒரு படத்தை பற்றி பேசுவதற்கும் அதனைப் பற்றி அவர் சமூக வலைதளப் பக்கத்தில் ட்விட்டர் போடுவதற்கும் சிவகார்த்திகேயனை விட 2 லட்சம் குறைவாகப் பெற்று 3 லட்சம் ரூபாய் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijaysethupathy-sivakarthikeyan

ஆனால் இந்த வருமானத்தை இவர்கள் வாங்குகிறார்கள் இவர்களுக்கு இடையில் வேலை செய்யும் நபர்கள் வாங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. இதுபோன்ற செயலில் கூடவே சுற்றும் விசுவாசிகள் செய்வதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியின் பெயரும் கெட்டுப் போகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -