ரஜினியை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த படத்திற்கு சிவாஜி பட டயலாக் தான் டைட்டிலாம்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிவேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக உள்ளன.

இதில் டாக்டர் திரைப்படம் மே மாதமும், அயலான் திரைப்படம் இந்த வருட இறுதியில் டிசம்பர் மாதமும் வெளியாக உள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து விட்டனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது டான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் காலேஜ் கலாட்டாவாக உருவாகி வருகிறது டான் திரைப்படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நடிகர்கள் அனைவருமே இடம்பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சத்தமில்லாமல் அட்லீயின் இன்னொரு உதவி இயக்குனர் அசோக் என்பவருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிவாஜி பட டயலாக்கை டைட்டிலாக வைத்துள்ளார்களாம். சிவாஜி படத்தின் இடைவேளையின்போது ரஜினிகாந்த், இனி நான் போற பாதை சிங்கப்பாதை என்ற மாஸ் டயலாக்கை கூறுவார்.

தற்போது அதையே படத்திற்கு டைட்டிலாக வைத்துவிட்டார்களாம். சிவகார்த்திகேயன் மற்றும் அசோக் இணையும் படத்திற்கு சிங்கப்பாதை என டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே பல இடங்களில் ரஜினி போல் மிமிக்ரி செய்து தான் பல குழந்தை நட்சத்திரங்களை சிவகார்த்திகேயன் தன் வசப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் படமான வேலைக்காரன் படத்தின் டைட்டிலையும் யூஸ் பண்ணிக் கொண்டார்.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்