விஜய் மாதிரி வருவான்னு பார்த்தா, முரளி விஜய்யை மிஞ்சுட்டான்.. சிவகார்த்திகேயனின் வைரல் மீம்ஸ்கள்

Sivakarthikeyan Troll Memes: நடிகர் சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய படங்களை நம்பி குடும்பத்தோடு பார்க்கலாம் என்பதற்காகத்தான். அதே போன்று சிவா மீது இதுவரைக்கும் எந்த வதந்திகளும் வந்ததில்லை என்பதால் குடும்பப் பெண்மணிகளின் ஆதரவு அவருக்கு ரொம்பவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் ஒரே பேட்டியில் உடைத்து விட்டார் இசையமைப்பாளர் இமான்.

Siva Memes 1
Siva Memes 1

சிவா எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார், அது என்னவென்று வெளியில் சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த வார்த்தையால் சிவகார்த்திகேயனின் மொத்த இமேஜும் உடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனை பங்கம் செய்யும் அளவிற்கு தற்போது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் எது உண்மை என தெரியவில்லை என்றாலும் இந்த மீம்ஸ்களை பார்க்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது.

SK Troll 2
SK Troll 2

இரண்டு நாட்களாக சிவாவை பற்றி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் லியோ ரிலீஸ் ஆன பிறகு அந்த படத்தை பற்றி பேச ஆரம்பித்ததால் நல்ல வேலை நம்மளை பற்றி பேச மறந்து விட்டார்கள் என சிவகார்த்திகேயன் சொல்லுவது போல் ஒரு மீம்ஸ உலாவி கொண்டிருக்கிறது. அதேபோன்று பாட்டாளி படத்தில் கோவை சரளா, வடிவேலு, போண்டாமணி மூவருக்கும் இடையே ஒரு காமெடி காட்சி இருக்கும். இதை சிவா கார்த்திகேயன், ஆர்த்தி சிவகார்த்திகேயன், இமான் முன்னாள் மனைவி மோனிகாவை கம்பேர் செய்து வீடியோ ட்ரோல் வெளியாகி இருக்கிறது.

SK troll 2 (1)
SK troll 2 (1)

தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய்க்கு இடையே நடந்த பிரச்சனை எல்லோருக்குமே தெரியும். தற்போது சிவகார்த்திகேயனை முரளி விஜய் உடன் ஒப்பிட்டு மீம்ஸ் வெளியாகி வருகிறது. அதேபோன்று லியோ படம் ரிலீஸ் ஆன பிறகு நம்மளை மறந்து விடுவார்கள் என்று பார்த்தால் மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்களே என சொல்வது போல் சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் டெம்ப்லேட் உடன் மீம்ஸ் வெளியாகி இருக்கிறது.

Siva Troll 3
Siva Troll 3

இமான் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஒரு காலத்தில் படங்கள் ஹிட் அடித்தது. இப்போது சிவகார்த்திகேயனின் படங்கள் எல்லாமே அனிருத் இசையில் தான் வெளியாகிறது. அனிருத் மற்றும் பாடகி ஜொனிடா காந்தி இருவருக்கும் காதல் இருப்பதாக ஏற்கனவே ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அனிருத், ஜொனிடா காந்தி வீட்டில் பத்திரமா இருந்துக்கோ என சொல்லிவிட்டு ஸ்டுடியோ வருவது போல் மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டு இருக்கிறது.

SK memes 4
SK memes 4

சிவகார்த்திகேயன் போன்ற ஒரு நடிகர் இது மாதிரி விஷயங்களில் ட்ரோல் செய்யப்படுவது அவருடைய ரசிகர்களுக்கு ரொம்ப தர்ம சங்கடமாக இருக்கிறது. நிறைய பேர் சிவகார்த்திகேயனை டேக் செய்து நீங்கள் இதற்கு விளக்கம் கொடுங்கள் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் சிவா இது பற்றி இதுவரைக்கும் வாய் திறக்கவில்லை. அவர் தன்னுடைய கருத்தை சொன்னால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும்.

Siva Meme 5
Siva Meme 5