சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மிகவும் வித்தியாசமாக வெளியிடப்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு மாவீரன் என்ற திரைப்படம் வெளிவந்தது. தற்போது அதே டைட்டிலை சிவகார்த்திகேயன் கைப்பற்றி இருக்கிறார். இதற்கு முன்பு கூட இவர் வேலைக்காரன் என்று ரஜினி பட தலைப்பை உபயோகப்படுத்தி இருந்தார்.
அந்த வகையில் நாம் கூகுளில் வேலைக்காரன் என்று டைப் செய்தால் உடனே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படம் தான் முதலில் வருகிறது. அந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தின் டைட்டிலை ஆக்கிரமித்து விட்டார்.
இப்பொழுது அதே போன்று மீண்டும் ரஜினி படத்தின் டைட்டிலையே வைத்திருக்கிறார். இப்படி தொடர்ந்து ரஜினியின் பட டைட்டிலை அவர் தேர்ந்தெடுப்பதால் பலரும் அவருக்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை வந்து விட்டதாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் கூட ரஜினி சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு ரெஃபரன்சை வைத்து விடுகிறார். இதனால் அவர் ரஜினிக்கு நன்றாக ஐஸ் வைப்பதாக கூட ஒரு பேச்சு திரையுலையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் கேள்விப்பட்டாலும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ரஜினி பட டைட்டிலை தேர்ந்தெடுப்பதற்கு பின்னால் பலமான திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக ரஜினியின் இடத்திற்கும் ஆசைப்பட்டு காய் நகர்த்தி வருகிறார்.