சூர்யா சம்பளத்தை கேட்கும் சிவகார்த்திகேயன்.. படுவேகமாக உச்சம் தொட ஆசையாம்!

கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் இருக்கும் சூர்யாவே தற்போதுதான் ஒரு குறிப்பிட்ட சம்பளத்தை எட்டியுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் படுவேகமாக வளர்ந்து வந்ததை தொடர்ந்து அடுத்த பட சம்பளத்தை கூட்டி விட்டாராம்.

சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சி அனைவரும் பார்த்ததுதான். தொலைக்காட்சியில் இருந்து நேரடியாக சினிமாவுக்கு வந்த தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்குப் பிறகு அதிகளவு வசூல் செய்யும் படங்கள் சிவகார்த்திகேயன் படங்கள் தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் திருப்பூர் சுப்பிரமணியம் ஓபனாகவே தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை பிரபல தெலுங்கு நிறுவனம் தயாரிக்க உள்ளது. முதலில் இந்த படத்திற்காக 25 கோடி சம்பளம் பேசினார்களாம்.

ஆனால் சிவகார்த்திகேயன் 30 கோடி வேண்டும் என அடம்பிடித்து கொண்டிருக்கிறாராம். தயாரிப்பு தரப்பு 27 கோடி வரை கொடுக்க ரெடியாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் 30 கோடியில் இருந்து ஒரு பைசா குறைக்க மாட்டேன் என தெரிவித்து விட்டாராம் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் ஆகியோர் 100 கோடி சம்பளத்தையும், அஜித் 80 கோடி சம்பளத்தையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு சூர்யா தான் 30 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது அவரது சம்பளத்தை தொட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

suriya-sivakarthikeyan
suriya-sivakarthikeyan
- Advertisement -