பட பட்ஜெட்டைவிட பத்து மடங்கு லாபம்.. ஒய்யால அவன விடாத என விரட்டும் சிவகார்த்திகேயன், சூர்யா

Surya: இந்த காலகட்டத்தில் இளம் இயக்குனர்களிடம் நல்ல ஒரு தெளிவான மனப்பான்மை ஏற்பட்டிருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் ஒரு தரமான கதையை எடுத்து விடுகின்றனர். தயாரிப்பாளர்களுக்கும் பெரிய தலைவலி கொடுக்காமல் நல்ல ஒரு லாபத்தையும் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகின்றனர்.

அப்படி தமிழில் சமீபத்தில் வந்த படம் ஒன்று பட்ஜெட்டை விட பத்து மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது. இவ்வளவுக்கும் அந்த இயக்குனர் ஒரு புதுமுகம். இப்பொழுது அந்த டைரக்டருக்கு பெரிய நடிகர்களிடமிருந்து தூது மேல் தூது வருகிறதாம்.

இயக்குனரை விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன், சூர்யா

சிவகார்த்திகேயன், சூர்யா முதல் சின்ன நடிகர்கள் வரை அந்த டைரக்டரை மீட்டிங் கூப்பிட்டு பேசி வருகின்றனர். அந்த டைரக்டரும் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கதை ரெடி பண்ண வேண்டும் என முனைப்பில் இருக்கிறார். கதையை முதலில் ரெடி பண்ணி முடித்த பின் வந்து சந்திக்கிறேன் என கூறுகிறாராம்.

பெரிய நடிகர்களிடமிருந்து அழைப்பு வந்த உடனேயே அட்வான்ஸ் வாங்காமல் ஒரு பக்கா கதையை ரெடி பண்ண வேண்டும் என எண்ணும் விஷயம் நல்லது தான். 2023ஆம் ஆண்டு வெளிவந்த “பார்க்கிங்” படத்தின் இயக்குனர் “ராம்குமார் பாலகிருஷ்ணன்” தான் இப்பொழுது பெரிய ஹீரோக்களின் தேடல்.

வெறும் ஐந்தரை கோடி பட்ஜெட்டில் தான் பார்க்கிங் படம் உருவானது. ஆனால் அதன் பின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 15 கோடிக்கு விற்பனையானது. அது போக இப்பொழுது நான்கு மொழிகளில் அந்த படம் தயாராக உள்ளது. எல்லாவற்றுக்கும் சேர்த்து 35 கோடிகள் வரை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். மொத்தம் 50 கோடிகள் வரை இந்த படம் பெத்த லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

- Advertisement -