4வது முறையாக இணையும் சிவகார்த்திகேயன், சூரி காம்போ.. தரமான சம்பவம் இருக்கு!

வெற்றிப் படங்களில் இணைந்த கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம்  காட்டுவது வழக்கம். மேலும் அவ்வாறு உருவாகும் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்தவகையில் ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா ஆகிய படங்களில் நடித்து, படத்தை வெற்றி அடைய செய்த காம்போ தான் சிவகார்த்திகேயன்- சூரி. இருவருக்கும் இடையே உள்ள டைமிங், ரைமிங் எல்லாம் படங்களில் வேற லெவலில் இருக்கும். இதனால் இந்த காம்போவிற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புதிதாக நடிக்கவுள்ள படத்தில் சூரி கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் அந்தப் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து எஸ்கே புரோடக்சன்ஸ் தயாரிக்க உள்ளதாம்.

மேலும் சிவகார்த்திகேயனின் இந்த 19வது திரைப்படத்திற்கு ‘டான்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிபி சக்ரவர்த்தி  இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளாராம்.

ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், முக்கிய வேடத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவும், சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தில் முன்னணி காமெடி நடிகரான சூரி இணைந்து உள்ளாராம்.

எனவே, இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே நான்காவது முறையாக இணைந்துள்ள சூரி- சிவகார்த்திகேயனின் கூட்டணி அதிக அளவில் ஏற்படுத்தியுள்ளது.

don-movie-artists
don-movie-artists
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்